பரிபூரண விசுவாசம் Jeffersonville, Indiana, USA 63-0825E 1எங்கள் பரலோக பிதாவே, இன்றிரவு அது எங்கள் நோக்கமாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பதற்காக மாத்திரமே இங்கு கூடியுள்ளோம். இன்று இரவு இங்கே வியாதியஸ்தரும், உபாதையிலிருப்போரும்,(பிசாசினால் பீடிக்கப்பட்டோர்) இருக்கையில், இந்த இரவு ஆராதனையை வியாதியஸ்தருக்கும், உடைக்கப்பட்ட சரீரமுடையவருக்கும் சுகமளிப்பதற்கான ஆராதனையாக பிரதிஷ்டை செய்கிறோம். இப்பொழுது பாடகர் பாடின அந்த அழகிய பாடலாகிய “அப்பொழுது இயேசு வந்தார்” என்றபடி, கர்த்தாவே இன்றிரவு இந்தக் காட்சியில் எங்களுக்காக வந்து, உபாதையிலுள்ள அனைவரையும் சுகப்படுத்தி, இன்றிரவு எங்கள் மத்தியில் ஒரு பெலவீனனும் இராதபடி செய்யும். கர்த்தாவே, நீர் இதைச் செய்து இந்த மணி நேரத்திற்கான விசுவாசத்தைக் காண உம்முடைய வார்த்தையை நோக்க உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 2யாரோ ஒருவர் தொலைத்து விட்ட ஒரு மூக்குக் கண்ணாடி சபையிலே கண்டுபிடிக்கப்பட்டு, இந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. உங்களில் யாருடையதாகிலும் அது இருக்குமானால், இங்கே மேடையிலே பிரசங்க பீடத்திலே இருக்கின்றது, அதைப் பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுது, அநேகர் வேலை செய்கிறவர்களாயிருக்கிறபடியால், அவர்கள் வீட்டிற்குச் சீக்கிரமாய் செல்ல இருக்கிறதினால் நான் அதிக நேரம் பேச மாட்டேன். அதன் பின்பு வியாதியஸ்தருக்காக ஜெபிக்க ஓர் ஜெபவரிசை வேறு உண்டு. இந்தப் பிற்பகல் வேளையில், நான் இங்கே உள்ளே வருவதற்கு முன்னால் சில அவசரமானவைகளைச் சரிபார்த்து வருவதற்கு அது எனக்கு ஒரு தருணத்தைத் தருகின்றது. அவர்களில் சிலர் மிக மோசமானவர்களாக, வன்முறையான குணத்தை உடையவர்களாக இருக்கின்றனர். வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி நான் அழைப்பை விடுத்துக் கொண்டே இருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் கரமானது வியாதியஸ்தரையும், பிசாசினால் பீடிக்கப்பட்டவரையும் சுகமளிப்பதைப் பார்ப்பது, அவர் எவ்வளவு அற்புதமானவர் என்பதைக் காட்டுகிறது. இப்பொழுது அடிக்கடி இந்த சுகமளிக்கும் ஆராதனைகளில்... அவசரமாகக் காணவேண்டிய வியாதியஸ்தர் இருந்தால், பரிசுத்த ஆவியானவர் வந்து, அதைச் சீக்கிரமாய் பகுத்தறிந்து, அதைத் தெரிந்தெடுத்து, அதைப் பற்றி ஏதாகிலும் கூறுவார். பின்பு மற்றவர்கள் அதிக மோசமானவர்களாய் இராதபடியால் நாம் அவர்களைச் சீக்கிரமாய்க் கடந்து ஆராதனையை வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிற ஒன்றாக பிரதிஷ்டை செய்ய எண்ணுகிறேன். நாம் இன்று இரண்டு முறை சபையாக கூடுவதால், வியாதியஸ்தருக்காக ஜெபிக்க ஒரு ஆராதனையை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று நான் எண்ணினேன். தெய்வீக சுகமளித்தலில் எனக்கு விசுவாசம் உண்டு. அது ஒரு வேதக் கட்டளையாக இருக்கிறது. பரிபூரண சுவிசேஷத்தில் அதைச் சேர்க்காமல் நாம் பிரசங்கிக்க மாத்திரம் கூடாது. 3இப்பொழுது எனக்கு இன்னும் தெரியவில்லை. நான் இன்றிரவு வீட்டிற்குத் தொலைபேசியில் பேசவில்லை. ஒருவேளை அடுத்த ஞாயிறும் நான் இங்கே மறுபடியும் இருக்கலாம், நாங்கள் உங்களுக்கு ஒன்றும் கூறாமல் இருந்தால்... பில்லி உங்களுக்கு ஒன்றும் அறிவிக்காமலிருந்தால் (இந்த வாரத்தில் இன்னும் கொஞ்ச நாள் கழித்து பில்லி அறிந்து தெரிவிப்பான்) அடுத்த ஞாயிறும் இங்கிருப்போம். அன்று உழைப்பாளிகளின் தினம்... பாருங்கள், ஆகையால் அன்று இளைப்பாறி சீக்கிரம் வீட்டுக்குச் செல்லலாம். பாருங்கள்? பில்லி ஒன்றும் உங்களுக்கு எழுதாமலிருந்தால் அல்லது வேறு யார் மூலமாவது சொல்லாமலிருந்தால் நான் அடுத்த ஞாயிறு இங்கிருப்பேன். சகோ. நெவில், திரும்பவும் அவ்விதம் வருவது சரிதானே (சகோ. நெவில் சகோ. பிரான்ஹாமுடன் பேசுகிறார் - ஆசி). ஓ! அது மிகவும் அருமை. 4இந்தச் சின்ன காலின்ஸைப் பற்றி யாரும் அறிய விரும்புகிறீர்களா? ஏழு முத்திரைகள் பிரசங்கிக்கப்பட்ட சமயத்தில் வாத ஜூரம் தாக்கி இருதயமும் மூட்டுகளும் பாதிக்கப்பட்ட நேரத்தில் முதுகின் மேலேயே படுத்துக்கொண்டு குழாய் மூலமாக உணவருந்த வேண்டுமென்று வைத்தியர்கள் கூறினார்கள். அவனுடைய தகப்பனும் தாயும் அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டில் கொண்டு வந்து அந்த அறையில் உட்கார வைத்து அவனுக்காக ஜெபித்தார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனைப் பரிபூரணமாகச் சுகப்படுத்தியதால்... அவன் மறுபடியும் பள்ளிக்குச் சென்றான். பள்ளி அதிகாரிகள் அதைப் பற்றி அவனுடைய பெற்றோரிடத்தில் விசாரித்தனர். பின்பு அவனுக்குச் சிகிச்சை செய்த இருதய நோய் நிபுணரை அழைத்துப் பரிசோதிக்க அவர்கள் தெய்வீக சுகத்தைப் பற்றி நம்பாதபடி, அந்தப் பையனை பரிசோதித்து அவன் பரிபூரண சுகமாயுள்ளதைக் கண்டனர். அப்பொழுது இயேசு வந்தார். சோதனைக்காரனின் வல்லமை உடைக்கப்பட்டது! வினோதமான ஒரு காரியம்... இன்று யாராகிலும் ஒருவரை அந்தப் பாட்டை இன்றிரவு பாடும்படியாகச் சொல்லப் போகிறேன். நான் அந்த அறையிலே ஊழியம் செய்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர், அப்பொழுது இயேசு வந்தார் என்ற பாட்டைப் பாடிக் கொண்டிருந்தார். நான் இன்றிரவு பேசுவதற்கு முன்னால், அந்தப் பாட்டைப் பாட நான் ஒருவரைக் கேட்கப் போகிறேன். ஆகையால் அவர் எல்லாக் காரியங்களையும் சரியாகச் செய்கிறார். 5இப்பொழுது, அதிக தூரம் பயணம் போகிற அநேகர் காலை வரை காத்திருப்பீர்களென நினைக்கிறேன். அந்த முயற்சியை நான் மெச்சுகிறேன். உங்களில் சிலர் இன்றிரவு வாகனத்தில் (மோட்டார்) பயணப்பட்டு காலை வேலைக்குச் செல்லுவீர்கள். அது மிகக் கடினமானது. அதை யோசித்துப் பார்க்கும் போது... நான் கூட சில சமயங்களில் மந்த உணர்வலைகளைப் பெற்றவனாகிவிடுகிறேன். நான் அதிகமாக உழைத்துக் களைத்துப் போகையில் அந்த விதமான கவலைக்குள்ளாகி விடுகிறேன். அப்பொழுது சாத்தான் என்னிடம் வந்து, “ஏன், உனக்காக யாரும் கவலைப்படுவதில்லை. இந்த உலகத்தில் உனக்கு ஒரு நண்பன் கூட இல்லை” என்று கூறுகின்றான்; ஆகையால் அது... ஞாபகம் வையுங்கள், சோதனைகளுக்கு அப்பாற்பட்டவன் நான் என்று நினைக்க வேண்டாம். பாருங்கள். அதை நான் மேற் கொள்ள வேண்டும். பின்பு அதை நான் திரும்பி இதைப் போலப் பார்க்கும் பொழுது, அதை சாத்தானின் முகத்திலேயே வீசி, ''அதைப் பற்றி என்ன?'' என்று கேட்கும்பொழுது, அது எனக்கு மேற்கொள்ளக் கூடியதாக முடிகிறது. ''அதைப் பற்றி என்ன?'' 6என்னுடைய ஒரு சிநேகிதன் இங்கே உள்ள கூட்டங்களில் உட்கார்ந்திருந்த பொழுது, தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கையில்லாத கூட்டத்தார் இந்த வாலிபனிடம், சமீபத்தில் வந்து, “அங்கே பிரசங்கிக்கப்படுகிற அந்தக் காரியம் அதிலே ஒன்றுமே அப்படி இல்லை” என்று கூறியிருக்கின்றனர். இந்த மனிதன் கென்டக்கி பட்டணத்திலே, ஒரு வயோதிப ஸ்திரீயின் வீட்டுப் பக்கத்திலே வசிக்கிறான். நாம் அக்டன் கூடார ஸ்தலத்திலே இருந்தபொழுது அந்த ஸ்திரீ புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய சகோதரி அந்தக் கூட்டங்களுக்கு அந்த இரவில் ஒரு கைக்குட்டையை தன்னுடைய பணப் பையிலிருந்து (Purse) வைத்தவளாக இருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் அந்த ஸ்திரீயை அழைத்து (நான் அந்தப் பட்டணத்துக்கு இதற்கு முன் சென்றதே கிடையாது) ''அவள் வீட்டிலிருக்கும் சகோதரி வயிற்றிலே புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, மிகவும் மோசமான நிலையில் வைத்தியர்களால் கைவிடப்பட்டவளாய் இருக்கின்றாள்'' என்று கூறினார். நான் அவளை நோக்கி, கர்த்தர் உரைக்கிறதாவது, ''நீ வீட்டுக்குப் போய் அந்தக் கைக்குட்டையை அந்த ஸ்திரீயின் மீது வை. ஏனென்றால் அவள் ஜீவிப்பாள் என்று சொன்னேன். அந்த இரவில் தான் அருகாமையிலிருந்தவர்கள் சகோதரன் பென் அங்கு எழுந்து நின்றபோது அங்கே ரட்சணிய சேனைக்காரர்கள் வந்து அதைச் செய்ததாக... அந்த ஸ்திரீ பரிபூரணமாக சுகமாக்கப்பட்டவளாய் தன்னுடைய வேலையையும் அயல் வீட்டாரின் வேலையையும் செய்கிறவளானாள். 7இதை அறிந்திருந்த இந்த வாலிபன், ''அவளுடைய அந்த சுகம் பெற்ற நிலையை விவரித்துச் சொல் எது அந்தக் காரியத்தை முடிவு பெறச் செய்யும். விவரி; அவளுக்குப் புற்று நோய் இருந்தது. லூயிவில் பட்டணத்தில் அவள் இருந்தாள். வைத்தியர்கள் அவளுக்கு ஆபரேஷன் செய்தபொழுது, அவர்கள் “வயிற்றை திரும்ப தைத்து விடுங்கள். திரும்ப அனுப்பிவிடுங்கள். அவளுக்கு ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறிவிட்டனர். “அவள் இப்பொழுது முழுவதும் சுகமாக இருக்கிறாள்'' என்றான். ''இதற்குப் பதில் சொல்'' என்று வினவினான். அந்தக் காரியம் முடிவு பெற்றதாகிவிட்டது. பாருங்கள்! வேதம் என்ன சொல்லுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ''அற்புதம் செய்யப்பட்ட அந்த மனிதன் அவர்கள் மத்தியிலே இருந்தபடியினாலே அவர்களால் ஒன்றும் பேசக் கூடாமல் போயிற்று. அங்கே தான் நாம் சாத்தானை அது வெட்கத்துக்குட்படுத்துகிறது இல்லையா? அற்புதம் செய்யப்பட்ட அந்த மனிதன் அங்கே நின்று கொண்டிருந்தான். தேவன் மரித்தோரை உயிரோடெழுப்புகிறாரா? மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்ட ஒரு மனிதன் இங்கே தானே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். தேவன் வியாதியஸ்தரைச் சுகப்படுத்துகிறாரா? ஓ! அதற்கு அறிகுறியாக கைகள் எல்லாவிடங்களிலும் உயர்த்தப்படும். தேவன் வியாதியஸ்தரைச் சுகப்படுத்துகிறார். நாம் அவரே மகத்தானவர் என்று அறிகிறோம். இருக்கிறவராக இருக்கிற மகத்துவமானவர். இருந்தவராக அல்ல. இருக்கப் போகிறவராக அல்ல, நான் இருக்கிறேன் இருக்கிறவராக இருக்கிறேன் எங்கும் பிரசன்னமாகி, எவ்விடத்திலும் எல்லா நேரத்திலும் இருக்கிறவராக! நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராக. 8இப்பொழுது நாம் சீக்கிரமாக ஆசீர்வதிக்கப்பட்ட வேதாகமத்துக்குத் திருப்புவோம். நான் அதை வாசிக்கையிலே என்னை உணர்ச்சிவசப்பட செய்கிற அந்த வேத பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். இன்று ஜெபிக்கப்படும் படியாக விரும்புகிற ஒவ்வொருவருக்காகவும் ஜெப வரிசையை ஒழுங்கு செய்ய விரும்புகிறேன். நாம் இப்பொழுது மாற்கு எழுதின சுவிசேஷம் 11-ம் அதிகாரம் 22-ம் வசனத்துக்குத் திருப்புவோம். எல்லோருக்கும் மிகவும் தெரிந்த ஒரு பாகம், சகோதரன் ரசல் அவர்களே, அந்த அணில்களைப் பற்றிப் பேசி என்னிடத்தில் அவர் சொன்னபோது இந்தப் பாகத்தைதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது எப்போதும் எனக்கு ஒரு புதிராகவே அமைந்துள்ளது. இதே வேத பாகத்தைத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் ''நான் சொன்னால்“ என்று சொல்லாமல் ”நீங்கள் சொன்னால்“ என்று குறிப்பிடுகிறார். 9இப்பொழுது நாம் வாசிப்போம்: ...இயேசு அவர்களை நோக்கி; தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். எவனாகிலும், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்ன படியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். நீங்கள் நின்று ஜெபம் பண்ணும் போது ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். மாற்கு: 12: 22-26 10இப்பொழுது, விசுவாசமானது மன்னித்தலின் மேல் சார்ந்திருக்கிறது. இன்று காலையில் நாம் சொன்னது போல அப்போஸ்தலர்கள் காலத்தில் நடந்ததைக் காணும் இடத்திற்கு சபையானது நடத்தப்பட வேண்டும். அதற்காகவே நாமெல்லாரும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம். அது இப்போது வாசலின் அருகே வந்திருக்கிறது. நாம் அதைப் பார்க்கிறோம். ஆனால் இன்னும் அதிகமாக அதைப் பார்க்க நாம் விரும்புகிறோம். நாம் அதை எந்த அளவுக்கு விரும்புகிறோமென்றால், அது நம்முள் பாய்ந்து நமக்கு உதவியாகவும், மற்றவர்களுக்கு வழிந்தோடுகிறதுமாயிருக்க வாஞ்சிக்கிறோம். ஞாபகம் வையுங்கள், இயேசு (இந்தக் காலையில் நமது பாடத்தில் பார்த்தது போல) அவர் தமது வல்லமையைத் தமக்காக உபயோகிக்காமல், மற்றவர்களுக்காக அதை உபயோகித்தார். அதற்காகவே அவர் அனுப்பப்பட்டிருந்தார். நீங்கள் சில சமயம் யோசிக்கலாம், “வல்லமை நிறைந்திருந்த ஓர் மனிதன் (இயேசுவைப் போல) எப்படி வியாதிப்படலாம் என்று யோசிக்கலாம். ஆம் ஐயா. ஒரு புஸ்தகத்திலே, நாயினூர் விதவையின் மகனை உயிரோடெழுப்பியதைப் பற்றி எழுதிய இடத்திலே, (”தாவீதின் வீட்டின் இளவரசன்'' என்ற புஸ்தகம் என்று நினைக்கிறேன்) அவர் ஒரு பாறையின் மீது உட்கார்ந்து தலைவலியினாலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். பாருங்கள்? நமது பெலவீனங்களைச் சுமந்தார். 'சுமத்தல்' என்றால் அவைகளைக் கட்டுவது என்று பொருள். பாருங்கள். அவர் சுமந்தார். நாம் கொண்டிருந்தது போல், அவர் எல்லாக் காரியங்களையும் கொண்டிருந்தார். அவர் வியாதிப்பட்டார். அவர் சோதிக்கப்பட்டார். அவருக்கு தொந்தரவுகள் இருந்தன. நமக்கிருந்தது போல அவருக்கும் மனச்சோர்வுகள் இருந்தன. அவர் ஒரு சரியான மத்தியஸ்தராக இருக்கும்படியாக இவைகளெல்லாம் அவருக்கிருந்தது. ஆதலால் அவர் அறிவதற்கு முன்னால், இவைகளில் பங்கேற்றவராக திராட்சத் தோட்டத்தின் காவலராக இருக்கும்படியாக இருந்தது. வேதத்தைச் சரியாக நோக்கினால், கிணற்றண்டை இருந்த ஸ்திரீ மற்றுமுள்ள அநேக காரியங்கள்... 11வேதத்திலுள்ள ஒவ்வொரு வசனத்தையும், வசனத்தின் ஒவ்வொரு பாகத்தையும் நான் விசுவாசிக்கிறேன் என்று உங்களிடத்தில் கூற விரும்புகிறேன். இதை விசுவாசிக்க விரும்பாத குற்றம் கண்டுபிடிப்போர் (Critics) இன்றைக்கு அநேகர் இருக்கிறார்கள். ஒரு வியாக்கியானி ஒரு முறை “இயேசு இரு வழிச் சந்தியில் கட்டப்பட்டிருந்த கோவேறு கழுதைக் குட்டியை அவிழ்க்க அந்த சீஷர்களை அனுப்பிய பொழுது, அந்தக் கழுதைக் குட்டியை ஏற்கனவே அந்த இடத்திலே கட்டி வைத்திருந்தார்'' என்று கூறினார். பாருங்கள். தேவனே அதை ஏற்கனவே ஒழுங்குபடுத்தியிருந்தார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அன்றொரு நாள், தேவன் என்னிடம், இங்கே இருக்கிற சகோதரன் டெளவிடம் (Bro. Dauuch) நான், “தெருவிலே மறுபடியும் கைகுலுக்குவேன்'' என்று கூறினார். அது வினோதமாக இருந்தது. ஏனெனில் அன்று காலை நான் அங்கில்லை; ஆனால் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து நான் அவரைத் தெருவில் சந்திக்க நேர்ந்தது. தெருவிலே அவர் வந்து கொண்டிருக்கையிலே நான் காரிலிருந்து இறங்கி அவருடன் கை குலுக்கினேன். என்னை அவர் பார்க்க முடியவில்லை, அவர் தன் கண்ணாடியைக் கழற்றியிருந்தபடியால் என்னைப் பார்க்கக் கூடாதவராய் இருந்தார். அவர் என் சத்தத்தைக் கேட்டவுடனே அழ ஆரம்பித்தார். அது என்னவாக இருந்தது? சாதாரணமாக அவர் அப்படிச் செய்யமாட்டார். ஆனால் பிராணவாயு (Oxygen) கொடுக்கப்பட்ட அந்த திரைக்கு அடியில் அவருக்குச் சொல்லப்பட்டதற்கு அடையாளமாக, இவ்விதம் நடந்தது. நானும், “நீங்கள் மறுபடியும் சபையில் உட்காருவீர்கள்'' என்றேன். அதுவே அவருடைய இருதயத்தின் வாஞ்சையாக இருந்தது. சிக்காகோவிலே கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்ட பொழுது அந்தக் கூட்டத்துக்கு வர வேண்டுமென்று அவர் விரும்பினார். அவருடைய இருதய வாஞ்சை அதுவாக இருந்தது. நான் அவர் சீக்கிரம் குணமடைந்துவிட ஜெபிப்பதாக வாழ்த்தி அவருக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தேன். ஒரு அன்பின் சகோதரர் அவரைச் சந்திக்கச் சென்றபொழுது, இங்குள்ள கூட்டங்களுக்கு அவர் வருவதற்கு ஆவலோடு இருப்பதாகக் கூறினார். பாருங்கள்?இன்றிரவு நம்முடனே கூட அவர் உட்கார்ந்திருக்கிறார். அது ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டது அல்ல. அதே தேவன் அதை ஒழுங்குபடுத்தினார் அவர் சிறிய காரியம் முதற்கொண்டு எல்லாவற்றையும் பரிபூரணமாகச் செய்கிறார். 12ஒரு சமயம் வேதத்தைக் குறை கூறுபவன், “இயேசு ஐந்து அப்பங்களை எடுத்த ஐந்தாயிரம் பேருக்குப் போஷித்தது ஒன்றும் ஆச்சரியப்படுகிறதற்கில்லை. அப்பங்கள் அந்த நாட்களில் பெரியதாக இருந்தபடியால், ஒரு அப்பத்தை ஒரு ஆயிரம் பேருக்குப் பிட்டுப் போஷிக்க முடிந்தது” என்றான். நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக நான் கூறுகிறேன், ஒரு சிறு பையன் தன்னுடைய மதிய உணவுக்காக அதை வைத்திருந்தான். ஒரு சிறு பையன் ஐந்தாயிரம் பேர் சாப்பிட்டு திருப்தியடையும் படியாக ஐந்து அப்பங்களை கட்டிக் கொண்டு வந்தான். அதன்பின்பு, எடுத்த பன்னிரெண்டு கூடைகள் நிறைய இருந்ததைப் பற்றி என்ன? பாருங்கள்? ஓ அவர்கள்... வேதத்தைக் குறை கூறும் மக்கள். அவ்வளவுதான். அது தேவனுடைய வார்த்தையை மாற்றாது. அது அங்ஙனமே இருந்து முன்னேறிச் செல்கிறது. 13இப்பொழுது நாம் விசுவாசத்தின் மீது ஒரு வகைப்பட்ட வித்தியாசமான விசுவாசம்: “பரிபூரண விசுவாசம்” பேசுவதற்கு விரும்புகிறோம். அது மிகப் பெரிய காரியம். ''விசுவாசமானது கேள்வியினாலே வருகிறது'' என்று வேதத்திலே கூறப்பட்டிருக்கிறது. விசுவாசம் இல்லாமல் நீ இரட்சிக்கப்பட முடியாது. விசுவாசமென்பது அது அங்கேயுள்ளது என்று விசுவாசிக்கிற ஒன்றாய் இருக்கிறது, அது அங்கே உள்ளது என்பதை விசுவாசத்தைத் தவிர வேறொன்றினாலும் அறிவிக்கவும் முடியாது, இன்னும் சில நிமிடங்களில் நீங்கள் ஜெப வரிசையில் நிற்பதற்கு உங்களை ஆயத்தப்படுத்துவதற்கு உங்களுக்கு விசுவாசத்தைக் கொண்டு வர நான் முயற்சிக்கிறேன். 14இப்பொழுது விசுவாசமானது: “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும்'', மேலும் விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். நீ அவரைப் பார்த்திராமல் இருக்கும் பொழுது... தேவனை விசுவாசிக்கிறேன் என்று சொல்வாயானால், நீ விசுவாசத்தினாலே அதை நம்பவேண்டும். மேலும் நீ அவரைப் பார்க்கக் கூடுமானால், அது விசுவாசமே இல்லை. பாருங்கள் உணர்வுகள் கூறுவது ஏதும் விசுவாசமாக இருக்க முடியாது, அது விஞ்ஞான உண்மையாக இருக்கும் பாருங்கள். அது விசுவாசமாக இராது. ஆனால் அவரை விசுவாசத்தினாலே ஏற்றுக் கொள்ளவேண்டும். ''மேலும் தேவனிடத்தில் சேருகிறவன் அவரை தேவன் என்று விசுவாசிக்க வேண்டும். மேலும் விசுவாசமானது தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே வருகிறது”, பாருங்கள். முதலாவது இது தேவனுடைய வசனமென்று நீ விசுவாசிக்க வேண்டும். மேலும் வார்த்தையினாலே நீ தேவனிடத்தில் கிட்டிச் சேர வேண்டும். பாருங்கள், வசனத்தை எடுத்து அது சொல்லுகிறதை ''அது சரியே“ என்று நம்ப வேண்டும். அதற்கு எதிர்மாறாக உள்ள எதுவும் சரியல்ல. அந்த 'சத்தமானது' சொன்னதை ஆபிரகாம் அப்படியே விசுவாசித்தான். அவன், இருபத்தைந்து வருஷங்களுக்குப் பின்னால், நூறு வயதானபோது இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அவனுக்கு கொடுக்கப்பட்ட அதை அப்போது விசுவாசித்ததைக் காட்டிலும் இப்பொழுது அதிக உறுதியாக விசுவாசித்தான். பாருங்கள், அதை அவன் விசுவாசித்தான், மேலும் ''அவர் தாமே வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவர் என்பதை அவன் அறிந்தவனாய், தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மீது அவிசுவாசித்தினால் சிறிதும் தடுமாறாதபடி உறுதியாய் நின்று தேவனுக்கு துதி செலுத்தினான்“. இவ்விதமாகவே ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். தேவன் தாமே வாக்குப் பண்ணியதை விசுவாசித்தவனாய், நீ அசைக்கக் கூடாத விசுவாசத்தோடு வரவேண்டும். ஆனால் இப்பொழுது நீ அந்த விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஓர் நிலைக்குள் வந்தாக வேண்டும். அந்த விசுவாசத்தைப் பெற்றுக் கொள்வதைப் பற்றியே நாம் பேசப் போகிறோம். 15எபிரேயர் 1-ம் அதிகாரத்திலே நமக்கு இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியாக (பொருளாக - Substance) இருக்கிறது...'' இப்போது, இங்கே தான் அநேக மக்கள் தங்களுடைய சுகத்தை அல்லது தாங்கள் கேட்டுக் கொள்வதைப் பெற்றுக் கொள்ளத் தவறி விடுகின்றனர். ஏனென்றால் அவர்கள் விசுவாசத்தை இல்லாத ஒரு பொருளாக ஏற்றுக் கொள்ளுகின்றனர். பாருங்கள். அதை அவர்கள் விசுவாசிப்பதில்லை. அது ஓர் கற்பனையல்ல. அது ஓர் உண்மையான பொருளாக இருக்கிறது. இப்பொழுது கவனமாகக் கேள், பாருங்கள்! அது நீ கற்பனை செய்து கொள்ளக் கூடிய ஒன்றல்ல. அது உன்னுடைய சரீரத்திலுள்ள ஒரு ஸ்பரிசம் உனக்கு ஒன்றை வெளிப்படுத்துவதைப் போன்று அது அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது. “இது காகிதத் துண்டு'' என்று என்னுடைய கண்கள் கூறுவது எவ்வளவு உண்மையானதோ அது அவ்வளவு உண்மையுள்ளது. அது ஒரு ”வெளிச்சம்'' என்று கூறுவது எவ்வளவு நிஜமாக உள்ளதோ, அதைப் போன்றது, ''நான் அணிந்திருக்கும் சட்டையை உணருகிறேன்“ என்பதைப் போன்று அது உண்மையுள்ளதாக இருக்கிறது. அது அந்தக் குழந்தை அங்கே பேசுவதோ அல்லது அது சத்தத்தை எழுப்புவதோ அதைப் போல உண்மையானதாக இருக்கிறது. பாருங்கள் அது சங்கீத நாதம் எழுப்புவதைப் போல உண்மையானதாக இருக்கிறது. அது நான் என் வாயிலே சுவைக்கக் கூடிய ஒரு பொருளைப் போன்று உண்மையானதாக இருக்கிறது. அது அவ்வளவு உண்மையாக இருக்கிறது. ஆனால் அதை நீ யாருக்கும் காட்ட முடியாது. நீ மாத்திரம் அதைக் கொண்டவனாக இருக்கிறாய். ஆமென். அது உன்னுடையதாக இருக்கிறது. விசுவாசம் ”பொருளாக“ (Substance) இருக்கிறது. பாருங்கள், அது ஒரு கற்பனைக் கதையல்ல. ஆகவே அநேக மக்கள் வந்து... இப்பொழுது இவைகள் உண்மையான, ஆழமான பாடங்களாக இருக்கின்றன. நான் அதனுடைய மேல் பாகத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ள நீ அதன் ஆழத்தை தோண்டிக் கொண்டிரு. பாருங்கள்! 16கவனி, அது கற்பனையாக இல்லாமல், நீ உண்மையிலேயே அதை உடையவனாக இருப்பாயானால், நீ பெற்றுக் கொண்ட ஒரு பொருளாக இருக்கிறது; மற்ற ஏதாவது ஒரு பொருள் எவ்வாறு உனக்கு உண்மையாக, அசலாக இருக்கின்றதோ, அதைப் போன்று அது உண்மையாகவே இருக்கிறது. நீ ஒரு வாகனத்தில் சவாரி செய்வதைப் போன்று... நீ அறிந்துள்ளபடி, அது அவ்வளவு உண்மையானதாக இருக்கிறது. நீ ஒரு சபையிலே உட்கார்ந்திருப்பதைப் போன்று, அது அந்த அளவுக்கு உண்மையானதாக இருக்கிறது. நீ என்னுடைய சத்தத்தைக் கேட்பது போன்று அது அவ்வளவு உண்மையானதாக இருக்கிறது. அது ஒரு பொருளாக இருக்கின்றது... கற்பனை அல்ல... உணர்ச்சிவசப்படக் கூடிய ஒன்றல்ல அது உனக்குள்ளே இருக்கின்ற ஒன்று. நீ தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே அது உனக்கு வருகிறது. (அது மாத்திரமே)... விசுவாசமானது கேள்வியினாலே வருகிறது... தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே. அது உனது விசுவாசத்தை திரும்பவுமாக அது இருக்க வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்லுகிறது... ஒரு தனிப்பட்ட ஆளிடத்திற்கல்ல. அது ஒரு மனிதனிடத்தில் இல்லை, அது ஒரு ஸ்தாபனத்தில் இல்லை. அது ஒரு கூட்டம் மக்கள் சேர்ந்த குழுவில் அல்ல. அது தேவனிடத்தில் இருக்கிறது. ஏனென்றால் தேவனே வார்த்தையாக இருக்கிறார். உன்னுடைய விசுவாசம் தேவனிடத்தில் இருக்கிறது. விசுவாசமானது தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே வருகிறது! “பின்பு தேவன் தம்முடைய வார்த்தையைக் கொண்டு யாரோ ஒருவர் செய்ததையோ அல்லது சொன்னதையோ வைத்து சொல்லாமல்... தேவனுடைய வார்த்தை சொல்லுகிறபடியே செய்கிறார். அவர் கூறியது ”எந்த ஒரு மனுஷனுடைய வார்த்தையும் பொய், என்னுடையதோ சத்தியமாக இருக்கிறது'' என்றார். 17இப்பொழுது, யாராவது ஒருவர் ஒரு காரியத்தை ஒரு வார்த்தையினாலே, தேவனுடைய செயலை, தேவனுடைய ஒரு வாக்குத்தத்தத்தை செய்கிறதை நீ பார்க்க, மற்றும் அநேகர் ''நான் கூட அதைச் செய்யக் கூடும் என்று கூறுவார்களேயானால்'' அது ஒரு கற்பனை என்று தான் கூறவேண்டும். மேலும் அதை, எங்கோ ஓரிடத்தில் குழப்ப முற்றவர்களாய் உடைக்கப்பட்டவர்களாக காணப்படுவார்கள். (அது ஒரு பொருளாக இருக்க வேண்டும்). இப்பொழுது அது ஒரு விசுவாசத்தின் சக்தியைக் கொண்டதாக இருக்கிறது. அது உன்னை ஒரு விசுவாசத்துக்குள்ளே கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது. நீ ஒரு 'ஓக்' மரத்தை (Oak tree) என்னிடத்தில் கேட்டு, நான் உனக்கு ஒரு 'ஓக்' மரத்தின் பழத்தை (acom) கொடுத்ததைப் போல் காணப்படுகிறது. நீ ஒரு 'ஓக்' மரத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளவனாக இருக்கிறாய். ஆனால் அது இன்னும் மரமாகவில்லை, அது தன்னைத் தானே உருவகப்படுத்தி வெளிக் கொண்டு வருமானால் அது ஒரு 'ஓக்' மரமாக வெளிவருகிறது. மேலும் தேவன் இதைச் செய்கிறதாக நீ கற்பனை பண்ணினால்... ஆனால் அது உனக்கு வெளிப்படுத்தப்படும் பொழுது, அது விசுவாசமாக இருக்கிறது ஒருக்காலும் தவறாத ஒரு பரிபூரண விசுவாசமாக இருக்கிறது. ஆகையினால் தான் அந்தத் தரிசனங்கள் எனக்கு அதிமுக்கியம் வாய்ந்தவைகளாக உள்ளன ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அது சரியாக நிரூபிக்கப்பட்டதாக இருக்கிறது. பாருங்கள். அதை அவர் வாக்குப் பண்ணினார் என்பதை நான் அறிவேன். மேலும் அவர் அதை அவருடைய வார்த்தையில் வாக்குத்தத்தம் செய்து, இங்கு வந்து, இன்றைக்காக அதை வாக்குப் பண்ணினார். ஆகையால் அவர் அவ்விதமாகக் கூறிய பொழுது நீ எங்கே நிற்கிறாய் என்று உனக்குத் தெரியும். பாருங்கள்! அது எனக்கு ஒரு விசுவாசத்தைக் கொடுக்கிறது, ஏனென்றால் அவர், தமது எழுதப்பட்ட வார்த்தைக்கு மாறாக, ஒன்றும் செய்ததில்லை. பாருங்கள். அது வார்த்தைக்கு மாறாக இருக்குமானால், அதிலே நான் விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியாது. (பாருங்கள்?) அது மறுபடியுமாக வார்த்தைக்கே அதைக் கொண்டு வருகிறது. விசுவாசமானது தேவனுடைய வார்த்தையைக் கேட்பதிலே இருக்கிறது. நீ தேவனுடைய வார்த்தையைக் கேட்க வேண்டும்! தேவனுடைய வார்த்தையானது எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கிற வார்த்தையாக இருக்கிறது. உன்னுடைய தேவையெல்லாம் இந்த வார்த்தையாக இருக்கிறது. 18இப்பொழுது விசுவாசமானது பொருளாக (Substance) இருக்கிறது. மேலும் விசுவாசமானது என்னவென்றும் விசுவாசத்தை உடையவர்கள் என்ன செய்தார்கள் என்றும் எபிரேயரிலே கண்டோம். பாருங்கள், அநேக சமயங்களில் மக்கள் இன்றைக்கு விசுவாசத்தை உடையவர்களாகவும், மறுதினம் அவர்களுக்கு அது இல்லாமலும் இருக்கிறது. அதற்கடுத்த நாள் மற்றொரு காரியம் காணப்படுகிறது, அல்லது ஏதோ ஒன்று காணப்படுகிறது. ஆனால் தேவன் ஒரு விசை விசுவாசமாகிய நங்கூரத்தைப் பாய்ச்சுவாரானால், அதை நீ நோக்கும் பொழுது, அதினின்று உன்னை அசைக்கக் கூடியது ஒன்றும் இல்லாமல் போகும். இப்பொழுது நீ அனாவசியமாக தலையிட்டுக் கொண்டும், அடைந்தாயிற்றென்றும், கற்பனை செய்து கொண்டும், கிடைத்துவிட்டதாக நினைப்பது ஆனால் உண்மையில் கிடைக்காமலிருக்கும் போது அதிகாரமில்லாமல் செயலில் ஈடுபடுவதற்கொப்பாகும். நீ இதை முயற்சி செய்கிறாய், அதை முயற்சிக்கிறாய், இந்த வழியிலே போகிறாய், அங்கே ஓடுகிறாய், இங்கே ஓடுகிறாய், ஆனால் இன்னும் அந்த விசுவாசத்தை அடையாதவனாக இருக்கிறாய்! ஆனால் எப்பொழுது... அதுதான் “விசுவாசம்'' என்று அழைக்கிறோம். நான்... (மன்னிக்கவும்) நான் உங்களுக்குச் செய்ய விரும்புவது. (நன்றி, சகோதரனே). இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். நாம் சபையானது தன்னை தேவனுடைய வல்லமையில் உயர்த்திக் கொள்ள வேண்டும். எப்படி? நாம் முடிவுக்கு மிகச் சமீபமாக இப்பொழுது இருக்கிறோம். இன்றைக்குச் சபையானது, பாவனை விசுவாசத்தை அப்புறப்படுத்தி உண்மையானதைப் பெற்றுக் கொள்ளவும் ஆழமான காரியங்களைப் போதிக்கவும் தக்கதான நிலையிலுள்ளது. பாருங்கள். அது நீ அறிந்த ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் நீ சகோதரன் பிரான்ஹாமே! ''அது அல்ல வெளிச்சம்'' என்று கூறலாம். ''இருந்த போதிலும் அதுவே வெளிச்சம் என நான் அறிவேன்'' ''அதுதான் வெளிச்சம் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' ''நான் அதைக் காண்கிறேன்''. ''நல்லது! நீ தவறாக இருக்க முடியாது என்று உனக்கு எப்படித் தெரியும்?''. “என்னுடைய பார்வையானது அது வெளிச்சம் என்று எனக்கு எப்பொழுதும் கூறுகிறது”, பாருங்கள்! 19மேலும் அதனால் தான் நான் அந்தத் தரிசனங்களை நம்புகிறேன். அவை உண்மையானதாகவே இருக்கின்றன. ஏனென்றால் அவை தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகின்றன. அவர் அதை கூறினால் அது முடிந்துபோன ஒரு காரியம். அது அந்த விதமாகக் கூறப்பட்டால், அங்கே கற்பனைக்குரிய காரியம் ஒன்றுமில்லை. அது நடக்கவே போகிறது. அப்பொழுது நீ கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கேட்கும் பொழுது, பாருங்கள் அது மனித சிந்தைக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றது. அது தேவனுடைய சிந்தையின் பரிமாணத்திற்குள்ளாக இருக்கின்றது. ஆனால் நீ இங்கே நின்று கொண்டு திராட்சை செடியைப் போல, திராட்சை செடியிலுள்ள ஒரு கிளை பழங்களைக் கொடுப்பது போன்று. பாருங்கள்? தேவன் மனிதனை, மனிதனை மாத்திரமே உபயோகிக்கிறார். தேவன் இயந்திரங்களை உபயோகிப்பதில்லை. தேவன் மனித குழுக்களை உபயோகிப்பதில்லை. ஸ்தாபனங்களை தேவன் உபயோகிப்பதில்லை. தேவன் எப்பொழுதுமே தனிப்பட்டவர்களையே உபயோகிக்கிறார். 20இப்பொழுது விசுவாசம் “பொருளாக” (Substance) இருக்கிறது. அதனாலே எல்லாக் காரியங்களும் செய்யப்படுகின்றன என்று நாம் அறிகிறோம். அது ஒரு கற்பனையாக இராமல், பொருளாக இருக்கிறது. விசேஷமாக பரிபூரண விசுவாசம். பரிபூரண விசுவாசத்தைப் பெற்றுக் கொள்வதைப் பற்றித்தான் இன்றிரவு நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அது கற்பனை அல்ல. இன்னும் சில மக்கள் என்னிடத்தில் வந்து “ஓ! எனக்கு எல்லா விசுவாசமும் உண்டு. ஓ நிச்சயமாக உண்டு” என்று சொல்லுகின்றனர். நல்லது, பின்பு நீ ஏன் இந்த ஜெபவரிசையில் வந்து நிற்கிறாய்? பாருங்கள், உங்களுடைய நடக்கைகளே நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறதை (விசுவாசத்தை) பெற்றுக் கொள்ளவில்லை என்று நிரூபிக்கிறது. உங்களுக்கு விசுவாசம் இருந்திருந்தால், பின்பு ஏன், எதற்காக இந்தக் காரியங்களையெல்லாம் எதற்காகச் செய்கிறீர்கள்? பார், உனக்குப் பரிபூரண விசுவாசம் இருந்தால், நீ நேராக தேவனை நோக்கிப் பார்த்து, உனக்கு சுகம் கிடைத்ததை விசுவாசித்து, நீ இந்த இடத்தை விட்டுச் செல்லுவாய். நீ இந்த ஜெப வரிசையில் வந்து நிற்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது. இந்தக் காரியங்களெல்லாம் உனக்குத் தேவையாய் இராது. ஏனென்றால் உன்னுடைய விசுவாசமானது இதையெல்லாம் செய்து முடித்திருக்கும். பார்... நான் ஒரு சட்டையை அணிந்திருக்கையில் ''ஒரு சட்டையை நான் அணிய வேண்டும்“, என்று கூறுவதில் என்ன பிரயோஜனம்! “ஒரு சட்டையை அணிந்திருப்பது உனக்கு எப்படித் தெரியும்?'' ''நல்லது, அதை நான் பார்க்கிறேன். மேலும் அது அங்கிருப்பதை நான் அறிவேன். அது என் சரீரத்தில் இருப்பதை உணர்கிறேன்“ நல்லது, அது போலவே பரிபூரண விசுவாசம் உன்னை பற்றி இருக்கும் பொழுது, அதைவிட மேலானதாக இருக்கும் ஒன்று உனக்கு இனித் தேவையில்லை. அது ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது. அது உனக்குத் தெரியும். ''அது உனக்கு எப்படித் தெரியும்?''. ''விசுவாசமானது அவ்வாறு எனக்குச் சொல்லுகிறது'' அது அப்படித்தான் பாருங்கள். நான் சொல்லுகிறதின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்களா? அந்தப் பரிபூரண விசுவாசம். 21மற்ற வார்த்தையில் கூறுவோமானால் 'துணிந்து செயல்படுதல்', ''நல்லது, நான் போகிறேன் வேதம் கூறுகிறது. “மூப்பர்களை வரவழைத்து அவர்கள் எண்ணை பூசி ஜெபிக்க வேண்டும்” என்று எனக்குத் தெரியும். நான் சொல்கிறேன், மேலும் நீ சொல்லுகிறாய், ''நல்லது, நான் சுகமாக்கப்படப் போகிறேன்'' பார். நீ உன் முயற்சியினால் அதை பெற்றுக் கொள்ள நினைக்கிறாய். நீ கடந்து செல்லும் போது, நீ, “ஓ! எனக்கு இன்னும் அது கிடைக்கவில்லை'' என்கிறாய்... பார். நீ அங்கேதான் இருக்கிறாய். உனக்கு விசுவாசம் இல்லவே இல்லை! உன்னுடைய உண்மையான விசுவாசம் அதை அங்கே செய்திருக்கும். உன்னுடைய உண்மையான விசுவாசம் உனக்கு அதை உண்மையானதாக்கும், பெரும்பாடுள்ள அந்தச் சிறிய ஸ்திரீயைப் பாருங்கள். அவள் “அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட மாத்திரத்தில் நான் குணமாவேன்'' என்றாள். அவள் அதைச் செய்தவுடனே, அவள் ”தனது சரீரத்திலே அந்தப் பெரும்பாடு, (அந்த இரத்தப்போக்கு) நின்று போனதை, தன்னில் தானே உணர்ந்தாள்“. அவள் மெய்யாகவே அதை விசுவாசித்தாள். மேலும் அவள் தொட்டபோது... அது நின்றுவிட்டது என்று நிரூபிப்பதற்கு; அது நின்றுவிட்டது. இயேசு திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்'' என்றார். அந்தப் பரிபூரண விசுவாசம்! மேலும் அதே பரிபூரண விசுவாசம் இன்றிரவு அன்று செய்தது போலவே இன்றும் இயேசு கிறிஸ்துவைத் தொடும். அந்த ஸ்திரீ அந்த நேரத்துக்குரிய பரிபூரண விசுவாசத்தோடு அங்கு வந்திருந்தாள். 22இப்பொழுது நாம் பார்க்கிறோம், முதலில் சீஷர்கள் இந்தப் பரிபூரண விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை. அவர்களுக்கு அது இருக்கவில்லை. ஏனென்றால் கிறிஸ்து அவர்களுடன் நடந்து கொண்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு கிறிஸ்து அவர்களுக்குள் இருந்தார். ஆகையால், பாருங்கள், பரிசுத்த ஆவி இல்லாமல் இந்தப் பரிபூரண விசுவாசத்தைப் பெற்றிருப்பது கடினமான காரியம். அது அதைக் கொண்டு வரவேண்டும். அது அப்படியே செய்கிறது. இப்பொழுது நீ சொல்லலாம், “சீஷர்களுக்கு பரிபூரண விசுவாசம் இல்லை'' என்று. இல்லை, ஏனென்றால் அங்கே சந்திரரோகியான குழந்தை இருந்தது. அவர்களால் அவனிடத்திலிருந்து அந்தப் பிசாசை விரட்ட முயன்றும் முடியவில்லை. இயேசு வருவதைக் கண்ட அந்தத் தகப்பன் அவரிடத்தில், ''உம்முடைய சீஷர்களிடத்தில் என்னுடைய மகனைக் கொண்டு வந்தோம். ஆனால் அவர்களால் அவனைச் சுகப்படுத்த முடியவில்லை'' என்றான் பாருங்கள்? அதன் பின்பு சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து, ''நாங்கள் ஏன் அந்தப் பையனைக் குணப்படுத்த முடியவில்லை'' என்று கேட்டார்கள். அதற்கு இயேசு விசுவாசமில்லாததினாலே, “உங்களுடைய அவிசுவாசத்தினாலே” என்றார். அது சரியே. ''அதன் மீதுள்ள அவிசுவாசத்தினாலே...“ 23இப்பொழுது ஞாபகம் வையுங்கள். அவர்களுக்கு வல்லமை இருந்தது. இயேசு சில நாட்களுக்கு முன்புதான் அவர்களுக்கு வியாதியஸ்தரைச் சுகப்படுத்த, மரித்தவர்களை எழுப்ப, பிசாசுகளைத் துரத்த அதிகாரம் கொடுத்திருந்தார். அவர்களிடத்தில் வல்லமை இருந்தது. ஆனால் அந்த வல்லமையை உபயோகிக்க அவர்களிடம் விசுவாசம் இல்லை. பிரான்ஹாம் கூடாரமும் மணவாட்டியும், சபையும் இந்நிலையில்தான். பரிசுத்த ஆவி இங்கே வல்லமையுடன் இருக்கிறார். ஆனால் அதை அசையப் பண்ணக் கூடிய அந்த விசுவாசம் உங்களிடத்தில் இல்லை. நான் சொல்லுகிறது உங்களுக்குப் புரிகிறதா? அதை அசைக்க விசுவாசம் அத்தியாவசியமாயிருக்கிறது. இங்கே, நான் கையினால் நிரப்பிய துப்பாக்கி ரவைக் குண்டு இருக்கிறது. இதை விசைத்தால், வார்த்தையைப் போன்று என்ன செய்யும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் துப்பாக்கியை உபயோகித்து விசையைத் தட்டும் பொழுது மாத்திரமே அது சுடுகிறது. நெருப்பானது அந்த துப்பாக்கி பொடியினிடத்தில் சேர வேண்டும். அந்தத் தூளிலே வல்லமை உண்டு. ஆனால் அதிலே நெருப்பு வீழ்ந்த மாத்திரத்தில் அது வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதைப் போலவே விசுவாசமானது அதைப் பற்ற வைத்து அதைத் தூக்கியெறியச் செய்ய வேண்டியிருக்கிறது. அது அவ்விதமாகவே நிகழ்கிறது (பார்?) பரிபூரண விசுவாசமானது, நம்மீது இறங்கியுள்ள, நாம் கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியின் வல்லமையை பற்றவைக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட விசுவாசம் தான் பெரிய காரியங்களை காணச் செய்யும்... அந்த விசுவாசமே உன் முன்னால் இன்று இருக்கிறது. 24இருதயம் முழுவதும் சந்தோஷம் நிறைந்தவனாய், நீ சொல்லப் போகின்ற காரியம் என்னவென்று முழுவதுமாக அறிந்தவனாய், வியாதியஸ்தனுடைய அறைக்குள் நுழைகின்றாய். உனக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டு, அதை அறிந்தவனாய் என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்தவனாய் அங்கே நடந்து செல்கின்றாய். அங்கே நுழைந்து, “இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் அங்கே எழுந்து நில். கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று சொல்கின்றாய். அதுதான் பரிபூரண விசுவாசம். அங்கே கோடிக்கணக்கானோர் நின்று கொண்டு அது நடக்காது என்று கூறினாலும், உனக்கு அது நிச்சயமாக நடக்கும் என்று தெரியும். அது நிச்சயமாக நடக்கும். மற்றவர்கள் எந்தவிதமாகக் கூறினாலும், ”உனக்குத்தான்“ அந்த ”விசுவாசம்“ இருக்கிறதே! யோசுவா இப்படிச் செய்ததாகக் கற்பனை பண்ணிப் பாருங்கள். இஸ்ரவேலின் மூப்பர்களையெல்லாம் அவன் வரவழைத்து, “ஆ! சகோதரர்களே, நாம் கர்த்தரின் ஊழியக்காரர்கள், நான் உங்களுக்காக கர்த்தரிடத்தில் ஒரு காரியத்தை சொல்ல, கேட்க விரும்புகிறேன். கர்த்தர் இன்னும் கொஞ்சம் சூரிய வெளிச்சத்தைக் கொடுக்க கொஞ்சம் சூரியனை நிறுத்தும்படி அவரிடத்தில் கேட்போமா?'' என்று கூறியிருந்தால்? இல்லை; அது அவனுக்கு தேவையாக இருந்தது. (ஜெபமில்லாமல், மற்ற ஏதுமில்லாமல்) அது அவனுக்குத் தேவையாக இருந்தது. ஆகவே அவன் சூரியனுக்குக் கட்டளை கொடுத்தான். அவன், “அங்கே நில் எனக்குத் தேவை இருக்கிறது; நான் கர்த்தரின் ஊழியத்தில் இருக்கிறேன். இந்த வேலையைச் செய்யும்படி இங்கே என்னை அவர் அனுப்பினார். எனக்குத் தெரிந்த அளவில் திறமையாகச் செய்கிறேன். ஆனால் எதிரி திரும்ப எதிர்த்து, கூடிக்கொண்டு இங்கே இருக்கிறார்கள். சூரியன் அஸ்தமிக்க விடுவேனானால், அவர்கள் கூடச் சேர்ந்து கொண்டு இன்னும் அநேகக் கஷ்டங்களைக் கொடுப்பார்கள். ஆகையால் சூரியனே! நில் சந்திரனே! அங்கேயே தரித்து நில்”. ஆமென்; அங்கே இருபத்தி நான்கு மணிநேரம் அது அப்படியே நிலைத்து நின்றது. 25இப்பொழுது உலகமானது சுற்றிக் கொண்டிருக்கிறது. அவன் அதைப் பிடித்து வைத்திருக்கிறான். மேலும், ''சூரியன் ஒரு ஸ்தானத்தில் ஸ்தம்பித்து நின்று போய், அசையாது இருக்குமானால் என்ன நடக்கும் தெரியுமா? என்று நீ கேட்கிறாய். அப்படி நீ சொன்னால் உன்னையே நீ அவபக்தியுள்ளவனாக, அஞ்ஞானியாக ஆக்குகிறாய். நீ விஞ்ஞானத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறாய். ஏனென்றால் உலகமானது நின்று போனால் கீழே விழுந்துவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆகையால் இப்பொழுது என்ன? இப்பொழுது தேவனுடைய வார்த்தை சரியில்லை என்று நீ கூறினால் உன்னை அஞ்ஞானியாக்குகிறாய், பாருங்கள் அது நடந்தது. அதுதான் முக்கிய காரியம். அது எந்த விஞ்ஞான ரீதியில் நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது நடந்தது! பரிசுத்த ஆவி எப்படி செயல்படுகிறது என்பதை நான் அறியேன். ஆனால் அது என் மேல் விழுந்ததை நான் அறிவேன். அது செயல்படும் விதம் என்னால் கூற முடியாது. ஆனால் அதனுடைய ஆசீர்வாதங்களை நான் அறிவேன். நான் அறிய வேண்டியது பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களையே. கிரியைகள் (Mechanics) அவர் செய்கிறார். அது அவர் மாத்திரம் அறிந்துள்ள பரம ரகசியம். இந்தப் பையனை சொஸ்தமாக்க முடியவில்லை. ஏனென்றால், சீஷர்களுக்கு வல்லமை இருந்தது. இயேசு அவர்களுக்கு எல்லா வகையான வியாதிகளைச் சொஸ்தப்படுத்த, பிசாசுகளைத் துரத்த, குஷ்டரோகிகளை சுத்தப்படுத்த, மரித்தோரை உயிரோடெழுப்ப அதிகாரம் கொடுத்தார். அவர்களுக்கு வல்லமை கொடுத்தார். ஆனால் தங்களுக்கு இருந்த வல்லமையை செயல்படுத்த அவர்களுக்கு விசுவாசமில்லாதிருந்தது. அவர்கள் இயேசுவிடம், ''ஏன் எங்களால் கூடாமற் போயிற்று?'' என்று கேட்டார்கள். 26இப்பொழுது, ஞாபகம் வையுங்கள். அவர்களுக்கு “வார்த்தை” இருந்தது. அந்த “வார்த்தை” அப்பொழுது “மாம்சமாக” இருந்தது. அந்த வார்த்தை அவர்களிடம், ''நான் உங்களுக்கு வல்லமையைத் தருகிறேன்'' என்றது. ஆமென். ''உங்களுக்கு நான் அதிகாரத்தை அளிக்கிறேன்'' மேலும் அவர்களுக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் அவர்களிடத்தில், அவர்களுக்குள்லிருந்த “வார்த்தை” கிரியை செய்யக்கூடும் விசுவாசம் இல்லாதிருந்தது. நான் சொல்கிறது உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் இயேசு அதைக் கொண்டிருந்தார். அவர் வார்த்தையாக இருந்தார். என்ன நடக்கும் என்று சொன்னாரோ அந்த விசுவாசத்தை உடையவராக அவர் இருந்தார். அவர், ''ஓ!அவனை இங்கே கொண்டு வாருங்கள். எந்த மட்டும் நான் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்“ என்றார். அவரிடத்தில் விசுவாசம் மற்றும் அவருடைய வல்லமையும் இருந்தது. அவர் எப்படி செய்தார்? அவர் ''நானாக ஒன்றும் செய்யமுடியாது'' என்றார். ஏன்? அவர், தாம் என்னவாக இருந்தார் என்பதில் மாத்திரம் சார்ந்திருந்தார். அவர், தாம் வார்த்தையாக இருந்ததை அறிந்து, அதில் சார்ந்திருந்தார். மேலும் வார்த்தையாக தம்மை உண்டாக்கின தேவனிடத்தில் அவர் விசுவாசமுள்ளவராய் இருந்தார். அவர் தேவனாக (வார்த்தையாக) இருந்தார். தேவன் அவருக்குள் இருந்தார். அது அவருக்கு விசுவாசத்தைத் தந்து தமது நிலையை அறிந்து கொள்ளச் செய்தது. அவர், தாம் யார் என்பதை அறிந்திருந்தார். ஏனென்றால் வேதம், அவர் இப்படிப்பட்டவர் என்று கூறியிருக்கிறது. இங்கு எல்லா வேத வசனமும் ஒன்றோடொன்று இணைந்து, அவர் எவ்விதமாக இருப்பார் என்று வேதாகமம் கூறியது. அவரில் நிரூபிக்கப்பட்டதாகக் காண்கிறோம். அவர் தாம் யார் என்று அறிந்திருந்தார். 27ஆகையால், தேவன் அவரை எப்படி உண்டாக்கியிருந்தாரோ, அதில் அவர் சார்ந்திருந்தார். இப்படியிருக்க தேவன் நம்மை விசுவாசிகளாக ஆக்கியிருக்க, அதன் பேரில் நாம் ஏன் சார்ந்திருக்கக் கூடாது? “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” (விசுவாசிகளை தொடரும் அடையாளங்கள்). அவர், தாம் யாராக இருந்தார் என்பதில் விசுவாசமுள்ளவராக இருந்தார். நீ ஒரு விசுவாசியாக இருப்பாயானால், நீ யாராக இருக்கிறாய் என்பதின் பேரில் உனக்கு விசுவாசம் இருக்க வேண்டும். நீ ஒரு விசுவாசி! தேவனிடத்தில் நீ விசுவாசமுள்ளவனாக இருந்தால், இங்கே வேதம் என்ன கூறுகிறது? ''நமது இருதயமே நம்மை குற்றவாளியாகத் தீர்க்குமானால் பின்பு நாம் விசுவாசம் கொண்டிருக்க முடியாது. ஆனால் நமது இருதயம் நம்மைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருந்தால், பின்பு நாம் விசுவாசங் கொண்டவர்களாய் நாம் தேவனிடத்தில் தைரியமுள்ளவர்களாய் (நம்பிக்கை உள்ளவர்களாய்) இருப்போம். அதை நீங்கள் வாசிக்க விரும்பினால் அது பரிசுத்த யோவான் 3-ம் அதிகாரம் 31-ம் வசனத்தில் காணப்படுகிறது. அதை அங்கு குறித்து வைத்திருக்கிறேன். இப்பொழுது கவனியுங்கள் பரிசுத்த யோவான்: 1யோவான்: 3:21. கவனி... நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகள் என்று தீர்க்காதிருந்தால் நாம் தேவனிடத்தில் தைரியங் கொண்டிருந்து... தவறான காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் வரை, தேவனிடத்தில் நீ தைரியங்கொண்டு செல்ல முடியாது. ஆகையால், பாருங்கள்! உன்னால் முடியும். நீயாகவே நீ தவறில் இருப்பதை உணர்ந்து கொள்ளுவாய். நீ தவறில் இருக்கிறாய் என்பதை நீ அறிவதினாலே, நீயாகவே உன்னை ஒரு பாவி என்கிற நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறாய். ஆனால் உன் இருதயம் உன்னைக் குற்றவாளியாக தீர்க்காதிருக்கும் போது, நீ உன்னை ஒரு விசுவாசி என்று அறிந்தவனாய், உனக்கும் தேவனுக்கும் இடையில் ஒன்றும் இல்லாதிருக்கையில் நீ கேட்டுக் கொள்வது எதுவோ அது உனக்குக் கொடுக்கப்படும் என்று அறிந்திருக்கிறாய். ஏனென்றால் அந்த சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்ட வண்ணமாகவே உனக்கும் வார்த்தையானது கொடுக்கப்பட்டிருக்கிறது. 28இப்பொழுது நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, நீ யாராக இருக்கிறாயோ அதன் பேரில் விசுவாசம் வைத்தல். நீ யாரென்று 'வார்த்தை' சொல்லுவதிலே விசுவாசம் வை, இயேசு தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் கொண்டு ''என்னைக் குறித்து எழுதியிருக்கிறதே'' என்று தன் நிலையை விளக்கிச் சொன்னார். சங்கீதங்களிலே தாவீதும் மற்ற தீர்க்கதரிசிகளும், மற்ற எல்லோரும் அவரைக் குறித்துப் பேசவில்லையா? ''நான் வானத்திலிருந்து தேவனிடத்திலிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பமாக இருக்கிறேன்“ ஆமென்! ''நானே ஏதேன் தோட்டத்திலிருந்த ஜீவவிருட்சமாக இருக்கிறேன். இவைகளெல்லாம் நானாக இருக்கிறேன். நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்''. மேலும் அவர், தேவனுடைய ஆவியானவர் தன் மேல் இருப்பதையும் தான் அபிஷேகிக்கப்பட்ட மேசியா என்பதையும் அவர் அந்தப் பரிபூரண விசுவாசத்தினாலே அறிந்திருந்தார். அவர் இப்போது, நான், நானாகவே ஒன்றும் செய்வதில்லை; ”ஆனால் தேவனில் இருக்கும் என் விசுவாசமே''. மேலும் தேவன் அவருக்குள்ளிருந்தார், வார்த்தையானது மாம்சமாக வெளிப்பட்டிருந்தது. மேலும் தேவனுடைய வார்த்தை உனக்குள் வரும் போது, நீ ஒரு விசுவாசியாக இருப்பதால், அது உனக்கு வெளிப்படுத்துகிறது. பார்? விசுவாசி என்ற வார்த்தைக்கு உனக்குள் அசைவாடுகிற “தேவனுடைய விசுவாசம்” என்று பொருள். உனக்கு அது பிடித்திருக்கிறதா? நீ அவ்விதமாக இருப்பதை நான் விரும்புகிறேன். எங்கே அது உள்ளது என்பதைச் சொல்லி கொடுக்க ஆசைப்படுகிறேன். விசுவாசமானது என்னவென்பதைக் காண்பிக்க விரும்புகிறேன். 29தாம் யார் என்பதை அறிந்தவராய், எவ்வித சந்தேகமுமின்றி தாம் தேவனுடைய குமாரன் என்று அவர் அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருந்தார். ஏனென்றால் தேவனுடைய வார்த்தையானது அவர் யாரென்பதை அடையாளம் காண்பித்தது. அவர், ''நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்யாமலிருந்தால் என்னை விசுவாசியாதிருங்கள். நான் அந்தக் கிரியைகளைச் செய்யாதிருந்தால் என்னை விசுவாசிக்க வேண்டாம். ஆனால் நான் செய்வேனாகில், என் கிரியைகளை விசுவாசியுங்கள். ஏனென்றால் அவைகள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருக்கிறது'' என்றார். ஓ! நீங்கள் அந்தக் காரியத்திற்கு விழிப்புள்ளவர்களாக இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் புரிந்து கொண்டீர்களா? அவர் யாராக இருந்தார் என்பதை வார்த்தையே அடையாளம் காண்பித்தது. அவர் ''என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் சொல்லக் கூடும்?'' என்று கூறினார். வேறுவிதமாகக் கூறுவோமானால், “என்னுடைய ஜீவியமும் என்னுடைய கிரியைகளும் மேசியா செய்ய வேண்டியவைகளை அப்படியே நிரூபிக்கவில்லை என்று யார் சொல்ல முடியும்?'' என்றார். ஒருவரும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர் மேசியாவாக இருந்தார். விசுவாசிக்க அவரிடத்தில் விசுவாசம் இருந்தது. அவர் சொன்னதெல்லாம் நடந்தது. பின்பு அவர் திரும்பவுமாக, ''நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இன்னும் கொஞ்சக் காலம் சென்றபின், உலகம் என்னைக் காணாது; ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் உங்களுடனே, உங்களுக்குள்ளே இருப்பேன். நீங்கள் என்ன பேசவேண்டும் என்று சிந்திக்க வேண்டாம். ஏனென்றால் பேசுவது நீங்களல்ல, உங்களிலிருக்கிற (ஜீவிக்கிற, வசிக்கிற) உங்கள் பிதாவானவரே, அவரே பேசுவார், அது நானல்ல, என்னில் வாசம் பண்ணுகிற பிதாவானவரே கிரியைகளைச் செய்கிறார்“ என்றார். நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? 30ஒரு வேதாகமக் கிறிஸ்தவனுடைய அடையாளங்களாக இந்த வார்த்தைகளைக் கிறிஸ்து கூறுகிறார், ''விசுவாசிக்கிறவர்களைத் தொடரும் அடையாளங்களாவன'', இந்த வார்த்தைகளை மறுதலித்து, அதே சமயத்தில் எப்படி உன்னை ஒரு விசுவாசி என்றோ ஒரு கூட்டம் மக்கள் என்றே அழைத்துக் கொள்ள முடியும்? நீ எவ்விதம் இந்த வார்த்தைகளில் ஒன்றை மறுதலித்து, உன்னை ஒரு விசுவாசி என்று அழைத்துக் கொள்ள முடியும்? பார்? நீ அதைச் செய்ய முடியாது. நீ ஒரு விசுவாசியாக இராததினால் அடையாளங்கள் உன்னைப் பின்தொடராது. ஏனென்றால் நீ உனக்கு வேண்டியதை மாத்திரம் விசுவாசித்து மற்றவைகளை அப்படியே விட்டுவிட்டு... விசுவாசிக்காமல் விட்டுவிடுகிறாய். ஆனால் நீ எல்லாவற்றையும் முழுவதுமாக எடுத்துக் கொண்டு அதை நம்பவேண்டும் (விசுவாசிக்க வேண்டும்). ஆகையால் நீ உண்மையாகவே விசுவாசிக்கும் பொழுது (பெயரளவில் நம்புகிறேன் என்கிற விசுவாசமல்ல, ஆனால் உண்மையாகவே விசுவாசித்தல்) இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களைப் பின்தொடரும் (அதாவது அந்த அடையாளங்கள் அவர்களால் செய்யப்படும்). ஓ, இந்தக் காலத்து கிறிஸ்தவர்களை அநேக ஆண்டுகளுக்கு முன்பிருந்த கிறிஸ்தவர்களோடு ஒப்பிட முடியுமா? ஓ!எப்படி அந்தச் சீஷர்கள் ஆவியின் வல்லமையினால் நடந்து, பரிசுத்த ஆவியில் அசைக்கப்பட்டவர்கள் அதைச் செய்தார்கள். நான் அன்றிரவு பேசியது போல அவர்கள் ஒரு கட்டப்பட்ட சிறைக் கைதியாய் தேவனுடைய வார்த்தைக்கும் தேவ சித்தத்திற்கும் ஓர் அடிமையாய் தேவன் அவர்களை அசைக்கும் வரை அவர்கள் அசையாமல் இருந்தனர். இந்த விதமாக ஒரு சபை எழும்புவதை காண நீங்கள் வாஞ்சிக்கவில்லையா? அது திரும்ப வரப்போகிறது. அது வந்தாக வேண்டும், அது சரியே. அது தன் பாதையிலே இப்பொழுது இருக்கிறது. 31ஏனென்றால் வார்த்தையானது தன்னை யார் என்று அடையாளம் கண்டு கொண்டது. தன்னை என்ன என்றும் அடையாளம் கண்டுகொண்டது. அதே வார்த்தை நம்மையும் அடையாளம் கண்டு கொண்டது. பாருங்கள் “ஒருவன் என்னில் அன்பு கூர்ந்தால், என் கற்பனைகளைக் கைக்கொள்ளுவான். அவன் என்னில் அன்பு கூருகிறேன் என்று சொல்லியும் என் கற்பனைகள் எல்லாவற்றையும் கைக் கொள்ளாவிட்டால் அவன் பொய்யனாக இருக்கிறான். சத்தியம் அவனுக்குள் இல்லை” நீ சொல்லலாம், ''நல்லது, நான் எல்லாவற்றையும் நம்புவதில்லை'' என்று. அப்படியானால் நீ ஒரு அவிசுவாசியே. அவ்வளவுதான், வேதம் அவ்விதமாகக் கூறுமானால், அது அவ்வளவு தான், என்றென்றைக்கும் அதுவே முடிவானது, வேதம் சொன்னதே சத்தியம். அவர் நம்மிடத்தில் கூறியுள்ளதை கவனியுங்கள். ''நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் பரிசுத்த யோவான்: 15, “நீங்கள் என்னில் நிலைத்திருந்தால்” (பாருங்கள்! அதில் விசுவாசம் கொண்டால்) ''நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வது எதுவோ அது செய்யப்படும்“. 32இப்பொழுது பார் அவர் யாரென்று அறிந்திருந்தார். ஆகையால் அவருக்கு விசுவாசம் இருந்தது. அவர் தம்மை யாரென்று அறிந்திருந்த பொழுது விசுவாசமானது கிரியை செய்தது. ''நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும்'' அப்பொழுது நீ யாரென்பதை அறிந்து கொள்வாய். உனக்கு வேண்டுவதைக் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். இன்றிரவு இந்த ஜெப வரிசையிலிருக்கும் ஒவ்வொருவரும் வந்து இவ்விதமாகக் கூறினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்! ''நான் ஒரு கிறிஸ்தவன் நான் எந்த குற்றச்சாட்டிலும் இல்லை. நான் அறிவேன், என் இருதயம் என்னைக் குற்றமாகத் தீர்க்கவில்லை என்று நான் அறிவேன். ஏதோ ஒன்று, என்னுடைய கஷ்டங்களுக்கெல்லாம் இன்று இரவு ஓர் முடிவு என்று கூறுகின்றது, அது நீவிசுவாசிக்கிறாய். நீ எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு இங்கு வந்திருந்தாலும் சரி, நீ எவ்வளவு செய்தாலும் சரி, பரிபூரணமான விசுவாசமானது தன்னை வெளிப்படுத்தி, உன்னிலே ஒரு பொருளாக தன்னைத்தான் அடையாளம் கண்டு கொள்ளும் வரைக்கும் அது கிரியை செய்யாது. அது கிரியை செய்ய ஆரம்பித்தபின், அதினின்று உன்னை ஒன்றும் அசைக்கப் போவதில்லை. 33உனக்கு புற்றுநோய் இருக்க, வைத்தியர் உன்னிடத்தில் நேற்று வந்து நீ நாளை காலைக்குள் (திங்கட்கிழமை காலைக்குள்) மரித்துப் போவாய் என்று சொல்லியிருக்கும் நிலையில் (உன்னுடைய இருதயம் உன் மூச்சு எல்லாம் நின்று போய், புற்று நோய் உன்னை முழுவதும் அழிக்க, உனது இரத்த ஊற்றெல்லாம் புற்றுநோயாக மாற) ஏதோ ஒன்று இந்த விதமான உண்மையான விசுவாசத்துடன் உன்னிடத்தில் வந்து, பரிபூரண விசுவாசம் உன்னிலே ஒரு பொருளாக செய்யப்பட்டிருக்கையில், நீ அந்த வைத்தியனின் முகத்தைக் கண்டு சிரிப்பாய். ஓ! நீ எலியாவைப் போல காணப்பட்டு, அவன் அந்த விக்கிரகத்துக்கு முன்னாலே மேலும் கீழும் நடந்தவனாய், ''ஓ! இன்னும் உரக்கக் கத்துங்கள். அவன் எங்காவது போயிருப்பான்'' என்றான். அவனுக்கு தான் செய்யப்போவது என்ன என்று தெரியும். ஏனென்றால் தேவன் என்ன நடக்கப் போகிறது என்று அவனிடத்தில் கூறியிருந்தார். அவன் “அக்கினினாலே பதில் உரைக்கும் தேவனே தேவன்” என்றான். அவர்கள், ''அந்தப்படியே நாம் செய்வோம்'' என்றனர். பின்பு அவர்கள் பலிபீடங்களிலே தண்ணீர் ஊற்றினர். அவர்கள் தங்களை கீறிக் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் செய்துவிட்டு, ''ஓ! பாகாலே! பாகாலே பதில் உரை'' என்று கூப்பிட்டனர். 34ஆனால், எலியாவோ அமைதியாய் இருந்தவனாய், ''இன்னும் சத்தம் போட்டுக் கூப்பிடுங்கள்'' என்று கூறி, ''அவன் எங்கேயாவது எதையோ பின் தொடர்ந்திருப்பான். ஒருவேளை மீன் பிடிக்கப் போயிருப்பான். ஒருவேளை எதையாவது செய்து கொண்டிருப்பான். பார் எங்கேயோ போய்விட்டான்'' என்றான். அவர்களை கேலி செய்தான். ஏனென்றால் என்ன நடக்கப் போகிறதென்று அவன் அறிந்திருந்தான். ஓ! கவனியுங்கள். அவன் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி, அவன் அங்கு சென்று, “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், இஸ்ரவேலின் தேவனுமாகிய கர்த்தாவே!'' என்று அழைத்தான். யாக்கோபு என்ற அந்த பெயரைச் சொல்லாமல் (யாக்கோபு என்றால் எத்தன்) அவனை இஸ்ரவேல் என்று அழைக்கிறான் (இஸ்ரவேல் என்றால் தேவனுடைய இளைய அரசன்). “ஆபிரகாம், ஈசாக்கு இளைய அரசன் (யாக்கோபு) ஆகியோரின் தேவனாகிய கர்த்தாவே, இன்றைக்கு நான் உமது ஊழியக்காரன் என்று தெரியக்கடவது. நான் என்னுடைய விருப்பத்தினாலோ அல்லது என்னுடைய சொந்தக் கற்பனையினாலோ இதைச் செய்யாமல் உம்முடைய கட்டளையினாலே இதைச் செய்கிறேன். உம்முடைய சித்தமே நீரே என்ன செய்ய வேண்டுமென்று என்னிடத்திலே சொன்னீர். இங்கே இவைகளெல்லாம் இருக்கும் என்று நீரே எனக்குக் காண்பித்தீர். இப்பொழுது, பலிபீடத்தின் மீது தண்ணீர் வார்த்துள்ளேன். உம்முடைய கட்டளையின்படி இந்தக் காரியங்களையெல்லாம் செய்திருக்கிறேன். இப்பொழுது, இவர்கள் அறியக் கடவர்கள். அவன் அதைச் சொன்ன பொழுது வானங்களிலிருந்து அக்கினி விழுந்தது. அவன் நிச்சயமாக விழும் என்று நம்பியிருந்தான், ஏனென்றால் அவனிடம் அந்தப் 'பொருள்' (Substance) இருந்தது. ஏன்? வார்த்தை அவ்விதமாகச் சொல்லிற்று. 35இப்பொழுது, இந்த அதே வேதம் தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. மேலும் தேவன் உனக்கென்று செய்த அந்த வாக்குத்தத்தமாகிய பொருளை (பரிபூரண விசுவாசத்தை) நீ பெற்றுக் கொள்ளும் போது அப்படியாகிறது. “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அங்கே நின்று கொண்டு, வித்தியாசமான பாஷைக்காரர் வருவதைப் பார்க்கும் போது எப்படியிருக்கின்றது? நீங்கள் பயப்படுகிறீர்களா? இல்லவே இல்லை, ஐயா. இல்லவே இல்லை. அவர் அதைச் சொன்னார். அவர் எனக்குக் கூறியபடியால் நான் ஒரு போதும் பயப்பட்டதே இல்லை. அதுவே சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் இன்றிரவு என்னை நோக்கி, ஜனாதிபதிகளின் கல்லறைக்குச் சென்று, நாளை காலை ஜார்ஜ் வாஷிங்டனை எழுப்பும் படியாக எனக்கு கூறினால், நான் உலகிலுள்ள அனைவரையும் அழைத்து, “வந்து அது நடந்தேறுவதைப் பாருங்கள்'' என்பேன். ''ஒவ்வொரு நபரையும் அழைத்து... குறை கூறக்கூடிய ஒவ்வொரு நபரையும் அழைத்து, அவர்களைச் சுற்றி நிற்கச் செய்யுங்கள். தேவனுடைய மகிமையைப் பார்க்கப் போகிறீர்கள். நீங்கள் உட்காரும்படியாக நாற்காலிகளை ஒழுங்கு செய்து கொஞ்ச நேரம் உட்காருங்கள். இன்னும் சிறிது நேரத்தில் நான் அவரை அழைத்தவுடனே அவர் வந்துவிடுவார்” என்பேன். 36அன்றிரவு பின்லாந்து தேசத்திலே (அந்தப் பகலிலே) அந்தச் சின்னப் பையன் மரித்தவனாக, சிதைந்து போனவனாக, கண்களிலும் காதுகளிலும் இரத்தம் வழிந்தவனாகக் கிடந்தான். அவன் கால்கள் உடைந்தவனாக, அவனுடைய கால் உறைக்கு வெளியே கால்கள் தெரிந்தவனாக, அவனுடைய காலணி எங்கோ தொலைந்ததாகக் காணப்பட்டது. நான் நோக்கி, அவனைப் பார்த்த பொழுது “இதுவே அந்தப் பையனாக இருக்க வேண்டும்'' என்று சொல்லி, ''அந்த வேதாகமத்தின் கடைசிப் பாகத்தைப் பார்ப்போம். சகோதரன் மூர் அவர்களே” என்று சொன்னேன். நம்முடைய சகோதரர்கள் சகோ. மூர், சகோ. லிண்ஸே அங்கு உற்று நோக்க, “இந்த விதமாக நடந்தேறும் என்று கர்த்தர் உரைக்கிறார் (ஓ என்ன?)” அங்கே ஒரு தேசம் இருக்கும். அங்கே ஏராளமான பசுமைக் காணப்படும். பாறைகள் ஒன்றின் மேல் ஒன்று இருக்கும். தலைமுடியை குட்டையாக வெட்டி, நீண்ட கால் சட்டையை பொத்தான்கள் உள்ளதாக, அவனுடைய கால்கள் அவனுடைய காலுறைகள் உயரமாக இழுத்துவிடப்பட்டதாக இருக்க, மாநிறமுள்ள அவனுடைய கண்கள் கறுப்பாக மாறிவிடும். அவன் அந்த மோட்டார் விபத்தில் கொல்லப்படுவான். ஆனால் அவன் மீது உன் கரங்களை வைக்க அவனுக்குள் திரும்பவும் அவன் ஜீவன் வரும்.'' 37இது எங்கே, எழுதப்பட்டதாக அங்கே இருக்கிறது. அவன் இங்கே கிடந்தவனாக ஆமென், வார்த்தைக்காக காத்திருந்தான். அப்போது நான், ''இன்னும் சில நிமிஷங்களில் இந்தப் பையன் உயிரோடு எழும்பாவிட்டால், நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று என்னை பின்லாந்து தேசத்திலிருந்து விரட்டிவிடுங்கள். ஆனால் அவன் உயிருடன் எழுந்தால், நீங்கள் முகங்குப்புற விழுந்து, மனந்திரும்புங்கள்“ என்றேன். நான் கூறினேன், “மரணமே! அவனை நீ பிடித்து வைக்க முடியாது தேவனுடைய வார்த்தையின்படி நான் அவனுடைய ஆவியை அழைத்தேன். ”இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே“ அவன் குதித்து எழுந்தது சரியே! பார்? விசுவாசம் அதை இறுகப் பற்றிக் கொண்டது. கர்த்தர் அவ்விதமாகச் சொன்னார், அப்படியே நிகழ்ந்தது. இப்பொழுது, அது தேவன் தரிசனத்தின் மூலமாக இந்த நாட்களில் பேசுதலாகும். ஆனால் அந்த தரிசனம் இதற்கு (வார்த்தை) எதிர்மாறாக இருக்குமானால், அது தவறானதாகும், இது தரிசனத்தை விட முக்கியமான ஒன்றாகும். எந்த ஒரு தரிசனமாகிலும் (வார்த்தைக்கு) எதிர்மாறாக இருக்குமானால் அதை அப்படியே விட்டுவிடும். அது தேவனுடையதல்ல, தேவன் தம்முடைய சொந்த வார்த்தைக்கு எதிர்மாறாக ஒன்றும் கூறுவதில்லை. ஆகையால் இந்த வார்த்தை உனக்கு சில காரியத்தைச் சொல்லியிருக்குமானால், பின்பு நீ என்ன நடக்கப் போகிறது என்ற நிச்சயத்தை உடையவனாயிருப்பாய். அங்கே ஒன்றுமில்லை. அது, “வியாதியஸ்தர்கள் மீது அவர்கள் கைகளை வைப்பார்கள். அவர்கள் சொஸ்தமாவார்கள்”, நல்லது சகோதரனே, அந்த விசுவாசம், பரிபூரண விசுவாசம் உன்னை இறுகப் பிடித்திருக்குமானால், இந்த ஜெப வரிசையை நீ கடந்து செல்லும் போது நீ குதித்துக் கொண்டும் சத்தம் போட்டுக் கொண்டும் “அது முடிந்தது, அது முடிந்தது” அது எல்லாம் முடிந்தது “அது முடிந்துவிட்டது'' என்று கூறிக் கொண்டு நீ புறப்பட்டுச் செல்லுவாய். உன்னுடைய இருதயத்தில் ஒரு விண்ணப்பம் இருக்கையில், அதற்காக ஜெபம் ஏறெடுக்கப்படும்போது, அதற்கு பதில் நிச்சயமாய் கிடைக்கப் போகிறது என்று விசுவாசிக்கும்போது, நீ ஒன்றையும் விவாதிக்காமல், அது நிச்சயமாய் நடக்கும், இதே விதமாய்தான் உதிரத்தின் ஊரலோடு இருந்த ஸ்திரீக்கும் நடந்தது. 38இயேசுவுக்கு பரிபூரண விசுவாசம் இருந்தது. அவரிடத்தில் அது இருந்தது. அது வந்தது. ஏனென்றால் அவர் வார்த்தையாக இருந்தார். நீ வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் போது? நீ வார்த்தையாக மாறுகிறாய். ''நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால்...“ என்னுடைய வார்த்தைகள் (இந்த வார்த்தை) நீங்கள் கேட்பது எதுவோ, அது உங்களுக்கு அருளப்படும் பாருங்கள்? ”இந்த மலையைப் பார்த்து, அசைந்து போ என்று சொல்ல, மற்றும் அதைச் சந்தேகிக்காமல், நீ சொன்னதை இருதயத்திலே விசுவாசிப்பாயானால் நீ சொன்னது உனக்குக் கிடைக்கும்“. நீ ஜெபிக்கும்போது, நீ கேட்பது உனக்குக் கிடைக்கும் என்று விசுவாசிப்பாயானால், உனக்கு அது கிடைக்கும். அது உனக்குக் கொடுக்கப்படும் நேரம், அல்லது இடமோ மற்ற எதுவுமோ அதை மாற்ற முடியாது. அது நடந்தது என்று அறிவாய். அது ஏற்கனவே முடிந்து போன ஒரு காரியமாயிருக்கிறது. 39இப்பொழுது கவனி! அவர் நம்மிடத்தில், ''நீங்கள் என்னில் நிலைத்திருக்க, என் வார்த்தை உங்களிலிருக்க (யோவான் சுவிசேஷம்), நீங்கள் உங்களுக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அது உங்களுக்கு அருளப்படும்,'' என்று இயேசு கூறுகின்றார். நீ ஒரு விசுவாசியாக வேதத்தில் உன்னுடைய நிலையைக் கண்டறிந்து கொள்ள வேண்டும். அவர் தம்முடைய நிலையை கண்டறிந்தது போல. கிலேயப்பாவிடமும் மற்றவர்களிடமும் அந்தக் காலையில் அவர், ''கிறிஸ்து வந்து என்னவெல்லாம் செய்வார் என்று எழுதியிருக்கவில்லையா?“ என்று கேட்டார். ''அவர்கள் இப்படிச் செய்வார்கள் என்று வேத வாக்கியங்களில் எழுதியிருக்கவில்லை?'' ''அவர் பாடுபட்டு அதன் பின்பு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடெழுந்திருக்க வேண்டும் என்பதை அறியீர்களா? ஏன் புரிந்து கொள்ளாமல் மந்த இருதயமுள்ளவர்களாக இருக்கிறீர்கள்” என்று கேட்டார். மேலும் அவர்கள் நினைத்தார்கள்... “ஓ! இந்த மனிதன் மற்ற மனிதரைவிட சிறிது வித்தியாசமாகப் பேசுகிறான்” என்று கடைசியில் பார்க்கப் போனால், அந்த வீட்டினுள் நுழைந்தவுடன் அது அவராகவே இருந்தது! பாருங்கள், அவர்கள் கண்கள் மூடப்பட்டனவாகவே இருந்தன. பாருங்கள். அவர் வேத வாக்கியங்களை விளக்கிக் காட்டின பொழுது, அவர்கள் அது “அவரே” என்று அறிந்தனர். 40இப்போது நீ கேட்டுக் கொள்வதை விசுவாசிக்க வேண்டும். நீ ஒரு விசுவாசியாக இருப்பாயானால், ஒரு விசுவாசியாக உன்னை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இந்தக் காரியங்களெல்லாம் உனக்காகவே என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உன்னுடைய வாழ்க்கையில் உன்னைக் குற்றப்படுத்தக் கூடிய காரியங்கள் இருக்குமானால் அவைகளைச் சரி செய்ய வேண்டும் பார்? உன்னுடைய வாழ்க்கையில் உன் இருதயம் உன்னைக் குற்றவாளியாக... நானோ அல்லது ஓரல் ராபர்ட்ஸோ அல்லது இன்னும் ஒரு டஜன் மக்களோ தங்களுடைய விசுவாசத்துடன் வந்து இங்கு உன் மீது ஜெபித்து மேலும் கீழும் குதித்து ஆடினாலும், உன் மீது காலன் காலனாக எண்ணெயை ஊற்றினாலும் அங்கே ஒன்றும் நடக்காது. அது சரியே. ஓரலினுடைய கூட்டங்களிலிருந்து என்ன வெளி வருகிறது? அதை ஜெப வரிசையில் பரிசீலனை செய்து பார்த்தேன். அவர் அந்த மனுஷனுக்காக ஏற்கனவே ஜெபித்திருப்பதாக அவர் சொல்லுவதைக் கேட்கலாம். ''கருப்பு முடியுள்ள ஓர் மனிதன், பெரிய உருவத்துடன், பெரிய தாடையுடன் இருப்பவர்“ அது ஓரல் ராபர்ட்ஸ்தான். ”பார் அது குறிப்பிட்ட காரியத்தைச் சொல்லும் குறிப்பிட்ட ஒரு பட்டணத்திலோ“. “ஆம்! அது சரியே” பார்? “ஓர் குறிப்பிட்ட மனிதனாலே நீ ஜெபிக்கப்பட்டாய்? பார், அது போல். ஆனால் திரும்பவும் உன்னுடைய கஷ்டம் அப்படியே இருக்கிறது பார்? அந்தக் காரியத்தை நீ சென்று சரி செய். உன்னுடைய மனைவியினிடத்திலும் உன் கணவனிடத்திலும் சென்று அந்தப் பாவத்தை அறிக்கை செய். போய் அந்தக் காரியத்தைச் செய்'' அந்தக் காரியத்தை நீ சரி செய்யும் வரை, நீ யாருக்காக ஜெபித்தாலும் சரி, அது உனக்கு ஒரு நன்மையையும் பயக்காது. உன் இருதயமே உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கும் போது, தேவன் அந்த விதமாக குற்றவாளியாகத் தீர்க்கப்பட்ட அந்த இருதயத்துக்குள் வரமாட்டார். பார், தேவன் அதனுள் வாசஞ் செய்யமாட்டார். நீ அதைச் சரி செய்ய வேண்டும். அதன் பின்பு நீ அதைச் செய்யும் போது? உனக்கு விசுவாசம் இருக்க வேண்டும். எல்லாம் சரியாயிருக்கும் போது, உனக்கு விசுவாசம் இருக்க, அதை நம்ப வேண்டும். பயப்பட வேண்டாம். 41யோபுவின் புஸ்தகத்திலே, இங்கே என்ன சொல்லுகிறது? ''யோபு பயந்தான்.'' அவன் பயந்த அதே காரியம் நடந்தேறியது. அதைக் கொண்டு வந்தது என்ன? பயமே. அவனுடைய பயமே. அதுவே அது நடக்கும்படி செய்தது. அவனுடைய விசுவாசம் அவனை அதனின்று காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவனுடைய பயமே அதை அவனிடத்தில் கொண்டு வந்தது. அது நடந்து விடுமோ என்று பயந்தான், அது நடந்தே தீர்ந்தது. அவன் அது நடக்காது என்று அறிந்திருந்தால், அது நடந்திருக்காது. நான் சொல்கிறது புரிகிறதா? நீ ஜெப வரிசையில் வரும்போது பயந்திருந்தால், “எனக்கு ஒருவேளை போதுமான விசுவாசம் இல்லையோ?'' என்று நினைத்தால், அது நடக்காது; கவலைப்படாதே. பார் ஆனால் நீ நடக்கப் போகிறது என்று அறிந்தால், அது நிச்சயமாக நடக்கும். பார், பார், அது ஒரு காரியத்தின் பொருளாக இருக்கிறது. யோபுவுக்கு இந்தக் காரியங்களெல்லாம் தன் மீதே வந்தே தீரும் என்ற பயம் இருந்ததால் அவைகள் அவன் மீது வந்தன. உன்னை விட்டு உன்னுடைய வியாதி போகுமோ அல்லது போகாதோ என்று பயந்தால், அது உன்னை விட்டுப் போகாது. உனக்கு விசுவாசம் இருந்தால் இது நிச்சயமாய் நடக்கும். நீ எந்த வைத்தியனையும் கேள். முதலாவது அவன் உன்னைச் செய்ய சொல்ல முயற்சிப்பது என்னவென்றால், அவன் உனக்குக் கொடுக்கிற மருந்திலே உனக்கு நம்பிக்கையை ஊட்டுவதே, உனக்கு அதிலே ஒரு நம்பிக்கையில்லாவிட்டால், அந்த மருந்தை எடுக்காமல் விட்டுவிடும். பார் நிச்சயம்! பின்பு அது என்ன? விசுவாசமே சுகத்தைத் தருகிறது. எல்லாக் காலத்திலேயும் விசுவாசமே சுகத்தை அளிக்கிறது. 42பேதுருவும், அவன் பயப்படும் வரைக்கும் எல்லாவற்றையும் சரியாகச் செய்தான். வார்த்தையானது பேதுருவினிடத்தில், தண்ணீரின் மேல் நடக்கலாம் என்று கூறினது. முதலாவது அவன் பயந்தான். அவன் அதை ஒரு ஆவேசம் (Ghost) என்று நினைத்து, “ஆண்டவரே! அது நீராக இருப்பீரானால் உம்மிடத்திலேயே தண்ணீரின் மேல் நடந்து வரக் கட்டளையிடும்'' என்றான். இயேசு ''நடந்து வா'' என்றார். அதுவே தான் யாக்கோபு: 5:14 அதுவே மாற்கு: 16, அதே கர்த்தர்தான் இதைச் சொன்னார், ''நடந்து வா“ என்றார். ஆகவே அவன் நடக்க ஆரம்பித்தான். அவன் சரியாகவே செய்தான், படகைவிட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தான். நீங்கள் அறிந்தபடி, கடலிலே ஒரு புயல் உண்டாயிற்று. பெரிய வெண்தொப்பி போன்ற அலைகள் இங்கே உள்ள சிறு குன்றுகளைவிட பெரிய அலைகள் நுரையானது அவைகள் மேலே பொங்கி வழிந்ததைப் போல பயங்கரமான 15 அல்லது 20 அடி நுரை அந்த வெண்ணிறத் தொப்பி போன்றவைகள் உடைத்துக் கொண்டு வர இந்த சூழ்நிலையில் ''ஆண்டவரே நீராக இருக்குமானால்...'' என்று கேட்பது ஒரு வினோதமான காரியமாக இருந்தது. அவர் நிழலைப் போல... ஒரு ஆவியைப் போல காணப்பட்டார். அவன் “நீராக இருக்குமானால் உம்மிடத்தில் தண்ணீரின் மேல் வரக் கட்டளையிடும்'' என்றான். இயேசு சொன்னார், “சரி, வா!'' என்றார். அவன் கீழே இறங்கினவனாக, “இது கர்த்தரே, நான் நடந்து செல்வேன்” என்றான். ஆனால் தன் கண்களை அலைகள் மீது வைத்தபோது அவன் பயந்தான். அவன் மனதிலே என்ன வந்தது? முதலாவதாக, அவன். நான் நடக்கப் போகிறேன், ஏனென்றால் வார்த்தையானது என்னை நடக்கச் சொல்லிற்று என்றான். அடுத்தப்படியாக, அவன் தன்னுடையதை நோக்கிப் பார்க்க ஆரம்பித்தான். நல்லது தன்னுடைய நோயின் அறிகுறிகளைப் பார்க்கலானான். அவன் அங்கே நோக்கி, அலைகள் எவ்வளவு பெரிது என்று பார்க்க ஆரம்பித்து, பயந்து போனான். அவன் அதைச் செய்த போது, கீழே போக ஆரம்பித்தான். பார்! அவன் பயந்தது நடந்தேறியது. அவன் நடக்க முடியும் என்று விசுவாசித்தானோ அதுவும் நடந்தது. அவன் நடக்க முடியும் என்று விசுவாசித்த போது, தன்னுடைய விசுவாசத்தின் மீது பயப்படவே, அவனுடைய பொருள் அவனைவிட்டு விலகிற்று. அவனிடத்தில் இல்லை. பார் அதை? இன்னும் தன் விசுவாசத்தை பெயரளவில் கொண்டவனாக இருந்தான். பாருங்கள். அவனிடத்தில் அந்த பரிபூரண விசுவாசம் இருந்திருந்தால் அந்தப் பொருள் அந்த வெண் தொப்பிகளுக்கு (White Caps) மேலாக சென்று அவரை அடைந்திருக்கும். பாருங்கள், ஆனால் அவன் அதைப் பெற்றிருக்கவில்லை. அது அவனிடத்திலுள்ளதாக மட்டும் அவன் நினைத்திருந்தான். “ஏன், இதைச் செய்யும்படி தேவன் கூறியுள்ளார், இது நிச்சயம் சம்பவிக்க வேண்டும்'' ஆகவே நான் இவ்விதம் செய்வேன் என்று முதன்முறையாக செய்தான்; படகிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான். அந்த அலைகள் எவ்வளவு தான் முரண்பாடாய் தோன்றினாலும் அவன் அவைகளைக் குறித்து கவலைப்படவில்லை. அவன் சிந்தையில் அது வரவும் இல்லை. 43இப்பொழுது, நீ இந்த விதமாக யோசித்து, “நல்லது, கொஞ்சம் பொறு, நான் எத்தனையோ ஆண்டுகள் சுகமில்லாதிருக்கிறேன்'' என்பாயானால், நிறுத்து! நீ அந்தப் படகுக்கே திரும்பி விடலாம். பார்? பார்? நீ அந்தச் சிந்தனையை உன்னிலிருந்து அகற்றும் போது... ''ஆபிரகாம் தன்னுடைய சரீரம் செத்துப் போனதையும், செத்துப் போயிருந்த சாராளின் கர்ப்பத்தையும் நினையாமலிருந்தான். அவன் அதை நினைக்கவே இல்லை. அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை... ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தன்னுடைய அறிந்து கொள்ளும் சிந்தனைச் செயலுக்கு கூட அந்தக் காரியத்தைக் கொண்டு வரவில்லை. அவன் அதைப் பொருட்படுத்தவே இல்லை; கர்த்தர் சொன்னதை மாத்திரம் நினைத்தவனாக அவன் முன்னேறிச் சென்றான். அதை... பேதுரு அதைச் செய்யும் வரையில், அவன் நடந்தான். 44ஆனால் இயேசு ஒரு வினோதமான ஆளாக, ஒருவரும் அறியாத ஒரு உலகில் வாழ்ந்து வந்தார். அவர் பரிபூரண விசுவாசம் கொண்டுள்ள ஒரு உலகில் வாழ்ந்து வந்தார். ஒரு கிறிஸ்தவன் இருக்கவேண்டிய ஒரு பரிபூரண விசுவாசத்தில் நாம் ஜீவிப்போமானால், நாம் இந்த உலகிற்கு ஒரு விந்தையாகவே, அறியாப் பொருளாகவே இருப்போம். ஜனங்கள் உன்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். நீ ஆவியிலே நடப்பாய். ஆவியானவர் சொல்லுகிறதையே நீ செய்வாய். அவர் எதைச் செய்ய வேண்டாம் என்று சொல்லுகிறாரோ, அதைச் செய்யமாட்டாய். அப்பொழுது ஜனங்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள்... நீ அவர்களுக்குப் புரியாத ஒருவனாக, வினோதமானவனாக இருப்பாய். அதே விதமாகத்தான் எல்லா விசுவாசிகளும்... அவர்கள் தங்கள் உலகிலேயே ஜீவிக்கும் விசித்திர வினோதமானவர்கள். ஜனங்கள் அவர்களைப் புரிந்து கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தங்களுக்காகவே ஒரு உலகில் ஜீவிக்கிறவர்கள். மற்றவர்கள் தீண்ட முடியாத ஒரு உலகிலே இயேசு ஜீவித்தார். சீஷர்கள் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களிடத்தில் அவர் பேசியபோது, அவர்கள் இவ்விதமாகக் கூறினர். அவர்கள் அவரை நோக்கி, ''நீ எங்களோடு உவமைகளால் ஏன் பேசுகிறீர்? எங்களுக்கு இது புரியவில்லை. இது எப்படி? என்று கூறினார்கள். அவர் ஜீவித்த அந்த உலகில் அவர்கள் இல்லை. பார், அவரை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, யாரும் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. 45ஆகையால் ஒரு மனிதன் விசுவாசத்தினாலே ஜீவித்து விசுவாசத்தினாலே நடந்து (நான் கூறும் விசுவாசம் “பொருள்” (Substance) “விசுவாசம்” வரும் போது இந்த முழு உலகினின்று பிரிக்கப்பட்டவனாய் கிறிஸ்துவிலே புது சிருஷ்டியாக மாறுகிறான். அங்கே நீ மணவாட்டி என்னும் பொருளுக்குள் செல்லுகிறாய். அப்பொழுது நீ எடுத்துக் கொள்ளப்படும் நிலைக்குச் செல்லுகிறாய். அது என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் (போதகர் மாத்திரமல்ல) மூப்பன்மார், தர்மகர்த்தாக்கள் அதாவது போதகரால்லாதோர் ஒவ்வொரு தனிப்பட்ட ஆளும் தேவனோடு இருக்கும் ஒரு உலகத்திலே நடக்கிறார்கள். அவருடைய ராஜ்யத்துக்குள் நீ ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டாய். அங்கே உன்னையும் தேவனையும் தவிர வேறு ஒருவருமில்லை. அவர் கட்டளைகள் கொடுக்க, நீ அதை நிறைவேற்றுகிறாய். அவர் சொல்லும் எல்லாவற்றையும் ஒரு சிறு சந்தேகத்தின் நிழல் கூட இல்லாதவாறு நீ நடந்து செல்லுகிறாய். கர்த்தர் இதை சொல்லுகிறார் என்றால், அதனின்று உன்னைப் பிரித்தெடுக்க பேசி வெளியேற்ற யாராலும் முடியாது. நீ தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறாய். நீ பரிபூரண விசுவாசத்துக்குள் செல்லுகிறாய். அது ஒருக்காலும் தவறாத பரிபூரணத்துக்குள் உன்னை வழிநடத்துகிறது. அந்த விசுவாசம் ஒருக்காலும் தவறாது. அவருடைய பரிபூரண விசுவாசத்தின் காரணத்தால் அவர்களுக்கு அவர் ஒரு புரியாத புதிராகவே காணப்பட்டார். அது போன்ற பரிபூரண விசுவாசம் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு அறிந்துகொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். 46நாம், ''பிசாசை எதிர்த்து நில்லுங்கள். அவன் நம்மை விட்டு ஓடிப்போவான்'' என்று கற்பிக்கப்படுகிறோம். எதிர்ப்பது என்றால், அவனை “புறக்கணிப்பது” எதிர்ப்பது “அவனிடமிருந்து அப்பால் செல்வதே.'' தேவன் ஒரு காரியத்தை உனக்குச் சொல்லுகிறார். அவன் என்ன சொல்ல முயற்சித்தாலும் நீ அவனிடத்தில் செவி மடுத்துக் கேட்பதில்லை. உன்னுடைய செவியானது ஆவியானவர் கூறுபவைகளுக்கு தவிர மற்றவற்றிற்கும் செவிடாக இருக்கிறது. ''ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் (கவனிக்கிறவன்) கேட்கக்கடவன்” அப்படி கேட்கக் கூடிய நிலையிலிருக்கிறவன், ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைப் பற்றிக் கொள்ளுகிறான். பாருங்கள்? 47சாத்தான் என்ன சொல்லுகிறான், “நல்லது, என்னால் முடியாது...'', அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை..., ''நல்லது, இதை நீ கற்றுக் கொடுத்தால், ஸ்தாபனமானது உன்னை வெளியேற்றி...'', அதற்கும் அவனுக்கும் சம்பந்தமேயில்லை; அவன் தொடர்ந்து செல்லுகிறான். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்” இது வேதத்தில் அடிக்கடி சொல்லப்படுவதை நீங்கள் அறிவீர்கள். ''விசுவாசமுள்ளவன் எவனோ, கேட்கும்படியான விருப்பமுள்ளவன் எவனோ அவன் கேட்கக் கடவன்“. பார், ”ஞானமுள்ளவன் எவனோ அவன் மிருகத்தினுடைய எண்ணை எண்ணக்கடவன்“, இந்த எல்லா வித்தியாசமான காரியங்கள். ''அதை உடையவன், மீதமுள்ள எல்லாரிடமும் கூறி இல்லாத அவர்களும் பெற்றுக் கொள்ளும்படி செய்யக்கடவன்'' 'விசுவாசத்தினாலே' என்பதைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த விசுவாசத்தை, பரிபூரண விசுவாசத்தை “ஆம்'' என்று சொல்லுகிற விசுவாசத்தை நீ பெற்றுக் கொள்ள வேண்டும். தேவன் ”ஆம்'' என்று சொல்லக் கூடியதை, நீ ''இல்லை'' என்று ஒன்றுக்கும் சொல்லக் கூடாது. பார்? அவர் ''ஆம்'' என்று சொல்லுகிறது. ''ஆம்'' என்று ஆகும். வேறு ஒன்றும் அதை உன்னிலிருந்து எடுத்துவிட முடியாது. 48அவர் தம்முடைய, பரிபூரண விசுவாசத்தின் காரணத்தால் வினோதமானவராக இருந்தார். பிசாசானவன் அவரைச் சுற்றி அதிக நேரம் இருக்க முடியவில்லை. அவன் மனதிலே நுண்ணறிவின் கருத்தெனும் அந்தப் பெரிய பொய்யுடன் வந்த பொழுது, அந்தப் பொய்யை இயேசுவுக்கு எதிராக அவன் உபயோகித்த போது, அவன் பத்தாயிரம் வோல்ட் மின்சாரக் கம்பியின் மீது மோதினதாக உணர்ந்தான். அது அவனை துக்கி கீழே எறிந்தது. ஆம் ஐயா அவர் அவனிடம் ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல என்று எழுதியிருக்கிறதே'' என்ற பொழுது அவனுக்கு மின்சார அதிர்ச்சி உண்டாயிற்று. அடுத்தபடியாக அவன் சிறிது மிருதுவாக அவரிடம் வந்து, ''நீர் பெரிய மனிதனாக இருக்கிறீர். உம்மை இங்கு கொஞ்சம் உயர்த்தி பெரியவராக்கிக் கொள்ளலாம்'' என்றான். அதற்குக் கர்த்தர், “அப்பாலே போ, சாத்தானே'' என்றார். ஓ! என்னே, அவன் எதைச் சந்தித்தான், பார்த்தீர்களா? உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக'' என்றார். பார். அவர் சாத்தானிடத்தில், தம்மை யார் என்று நிரூபித்து, தாமே தேவனாகிய கர்த்தர் என்று காண்பித்தார். ''பரீட்சை பாராதிருப்பாயாக என்று எழுதியிருக்கிறதே...'' சாத்தான் அவரை தேவனாகிய கர்த்தர் என்று அறியாதிருந்தால் அவன் “ஒரு நிமிஷம் பொறும், நீர் அந்த நபர் இல்லை ஐயா” என்று கூறியிருப்பான். ஆனால் அதைக் காட்டிலும் மேலான ஒன்றை அவன் அறிந்திருந்ததால் அவன் அப்படி இயேசுவிடம் கூறவில்லை . தாம் நிற்கும் ஆதாரம் எது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் ''உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக'' என்று கூறினார். அவரே தேவனாகிய கர்த்தர். மேலும் சாத்தான் அதை நன்கு அறிந்திருந்தான். ஏனென்றால் இயேசுவின் கிரியைகள் ஏற்கனவே அவர்தான் தேவனாகிய கர்த்தர் என்று நிரூபித்துவிட்டன. 49கவனி! இப்பொழுது கவனி, பரிபூரண விசுவாசம் எல்லா சூழ்நிலைகளுக்கும் மிஞ்சி நிற்கும் ஓர் எஜமானாக இருக்கின்றது. பரிபூரண விசுவாசம் எல்லா சூழ்நிலைகளையும் ஆளுகின்றது. அது எதுவாக இருந்தாலும் அது அதை ஆளுகை செய்கின்றது. இப்பொழுது கவனி! நீ ஒரு காரியத்தை விசுவாசிக்கும் போதோ, ஒரு காரியத்தைச் செய்யும் போதோ, நீ செய்கிறதில் உனக்கு விசுவாசம் இருக்கும் போது, அந்த சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரி, அதற்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. (சூழ்நிலைக்கும் விசுவாசத்துக்கும் சம்பந்தமே இல்லை) பாருங்கள், அது வியாதியுள்ள ஓர் அறையாக இருந்தாலும், இந்த குறிப்பிட்ட காரியம் நிகழும் என்று தேவன் உனக்கு வெளிப்படுத்தியிருந்தால் நீ பேசி விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். “ஓ! இந்த காரியம்...'' எந்த கேள்விகளையும் கேட்காதே. அது எல்லாம் ஏற்கனவே முடிந்துவிட்ட ஓர் காரியம். நீ போய்க் கொண்டேயிரு. பார். அது எல்லா சூழ்நிலைகளையும் மேற் கொண்டுவிடுகின்றது. ”நல்லது, நீ இதைச் செய்தால், இன்னார் இன்னார் அதைச் செய்யப் போவதாக“... அது... பார். அது சூழ்நிலையை ஏற்கனவே மேற்கொண்டுவிட்டது. பார். விசுவாசமானது தேவன் அதைச் செய்து கிரியாபூர்வமாக முடிப்பார் என்று நம்புகிறது. ''அவர் எப்படிச் செய்யப் போகிறார் என்பதை அறியேன், ஆனால் எப்படியாவது அதைச் செய்து முடிப்பார் பாருங்கள், அது எல்லா சூழ்நிலைகளையும் மேற் கொண்டுவிட்டது. மேலும் விசுவாசமும் அன்பும் உறவினர்கள், நீ, அன்பு இல்லாமல் விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் உன் விசுவாசமானது அன்பே உருவாகக் கொண்ட ஒரு தேவனிடத்தில் இருக்கிறது. விசுவாசமும் அன்பும் சேர்ந்து கிரியை செய்கிறது. 50நிச்சயமாக, அது ஒரு இளம் தம்பதிகளைப் போன்றது. நீ ஒரு வாலிபனையும் ஒரு யெளவன ஸ்திரீயையும் எடுத்துக்கொள். அவர்கள் நேசிக்கிறார்கள். ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். ஆழமான அன்புடன் நேசிக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் அதிகமாக அறிந்து, அன்பில் முன்னேறிச் செல்லுகையில் அவர்களுடைய இதயங்கள் ஒரே இதயத்தைப் போல் இயங்குகிறது. அவர்கள், அவர்கள்... இன்னும் கணவன் மனைவியாக ஆகவில்லை. ஆனால் அவர்களுடைய அன்பு அவர்கள் இருவரையும் கட்டுகிறது. மேலும் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கின்றனர். உண்மையாகவே அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கும் பொழுது, உண்மையாக நேசிக்கையில், மேலும் இந்தப் பெண் உன்னை நேசிக்கிறாள் என்று அவள் அறியும் போதும், நீ அவளை நேசிக்கிறாய் என்று அறியும் போதும், உங்களுக்குள்ளே ஒரு நம்பிக்கை (ஒருவரிலொருவர் விசுவாசம்) உண்டாகிறது. ஒருவரிலொருவர் விசுவாசம் இருக்கும் போது அந்த நம்பிக்கை உண்டு. உனக்கு விசுவாசம் (அன்பு) இல்லாவிட்டால் நீ திருமணம் செய்யாதிருப்பது நல்லது. பாருங்கள்? கவனி, உனக்கு விசுவாசம் இருக்கவேண்டும். மேலும் நீ அவர்கள் இருவரையும் பிரித்து ஒருவரை தெற்குக் கோடியிலும் மற்றொருவரை வடக்குக் கோடியிலும் வைப்பாயானால், அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பானது ஜீவ நாடியைப் போல் அடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் இயங்கும். அவர்கள் எங்கே இருந்தாலும் அதைப்பற்றி ஒன்றுமில்லை. அவர்கள் ஒருவரையொருவர் நேசிப்பதினால் அவர்கள் ஒருவருக்கொருவர் எந்த அளவு உண்மையுள்ளவர்களாயிருக்க முடிகிறதோ அந்த அளவுக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கின்றனர். நரகத்துக்குத் தப்ப வேண்டும் என்றிராமல் நீ கர்த்தரை நேசிப்பாயானால், உண்மையாகவே நேசிப்பாயானால், பின்பு தேவனிடத்தில் விசுவாசம் கொண்டுள்ளவனாய் இருப்பாய். நீ அவரை நேசித்தால், விசுவாசம் தானாக வரும். 51ஒரு வாலிபப் பெண்ணைப் போல... லூயிவில்லில் சில நாட்களுக்கு முன் நடந்தது. ஒரு ஸ்திரீ, அநேக ஆண்டுகள் கிறிஸ்தவளாக இருந்தவள். சமீப காலத்தில் கிறிஸ்தவனாக மாறின அந்த மனிதனை நேசிக்க ஆரம்பித்தாள். அவன் கிறிஸ்தவனாக ஆகி சில ஆண்டுகள்தான் ஆயின. அவர்களுக்குத் திருமணம் நடந்தேறியது. அந்த ஸ்திரீ அந்த மனிதனிடத்தில் ''என் கணவனே! உமக்கு இது ஒரு கடினமான காரியம். இப்பொழுதான் கிறிஸ்தவரானீர். நீர் கடினமான காரியங்களுடே கடந்து வந்திருக்கிறீர். (அவர் ஒரு காலத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாய் இருந்தவர்). எவ்வளவோ காரியங்களைக் கடந்து வந்திருக்கிறீர். உமக்கு சோதனைகள் கடுமையாக வரும் என்று நினைக்கிறேன். இப்போது ஒரு காரியத்தை மாத்திரம் நீர் அறிய வேண்டும், நீர் திரும்ப அந்தப் பழக்கத்துக்கு போய்விட்டால், நீர் சோதனையில் விழுந்து அந்தப் பழக்கம் உம்மை மேற்கொண்டு விட்டால், வீட்டிற்கு வெளியே தங்கிவிட வேண்டாம். நீர் திரும்பி வீட்டிற்குள் வாரும். இங்கே திரும்பி வாரும். ஏனென்றால் உமக்காக நான் காத்துக் கொண்டே இருப்பேன். நீர் திரும்பவும் வெற்றியைப் பெறும்வரை நான் உமக்காக ஜெபித்துக் கொண்டே இருப்பேன். நான் உம்மை திருமணம் செய்து கொண்டதால் உம்மோடு தங்கியிருப்பேன். வாழ்ந்திருப்பேன். நான் உம்மை நேசித்ததால் உம்மைக் கலியாணம் செய்து கொண்டேன். நீர் எந்த நிலையில் இருந்தாலும், இன்னும் நான் உம்மை நேசிக்கிறேன்'' என்றாள். சில நாட்கள் கழித்து தன் சகாக்களுடன் கொதி அறையில் மதிய உணவு அருந்திக் கொண்டிருக்கும் போது, அந்தக் கணவன் இந்தக் காரியத்தைப் பற்றிக் கூறி, “இப்போது எப்படி ஒரு மனிதன், இந்த விதமாக நேசிக்கும் ஒர் நபர் இருக்கும் போது, ஒரு சிறு தவறையும் செய்ய முடியும்?'' என்றான். பாருங்கள்? இந்தக் காரியத்தைப் பார்த்தீர்களா? அந்த நம்பிக்கையை நீங்கள் எவ்வாறு மீற முடியும்? 52நாம் பாவிகளாய் இருக்கையில், தேவனைவிட்டுப் பிரிந்து, தேவனில்லாமல், உலகத்திலே சேற்றின் உளையிலே இருந்த போது, இந்தக் காலையில் நான் கூறியது போல, தேவன் நம்மிடத்திலே வந்தார், தேவன் உன்னைத் தேடி வந்தார். நீ தேவனைத் தேடிச் செல்லவில்லை. “பிதா அவனை முதலாவது இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்''. தேவன் அந்த சேற்றினின்று உன்னைத் தூக்கியெடுக்க நீ இருந்த நிலைக்கு அவர் கீழிறங்கி, உன்னைத் தேடி, உன்னை வெளியே கொண்டு வந்துவிட்டார். அது உன்னிலே பரிபூரண அன்பை உருவாக்க வேண்டும். நீ முன்பு எப்படி இருந்தாய்? இப்பொழுது எப்படி இருக்கிறாய்? அது எதைச் செய்தது? உன்னை நேசித்த ஒருவராலே இப்படியிருக்க அவர் வாக்குத்தத்தம் செய்ததின் பேரில் உனக்கு விசுவாசம் இருக்க வேண்டாமா? உண்மையான அன்பு அவருடைய வார்த்தையில் ஒரு நம்பிக்கையை உருவாக்கும். 53நான் ஒன்றுமில்லாதிருக்கையில் அவர் என்னைப் பிடித்தார். இப்போதும் கூட நான் ஒன்றுமில்லை. ஆனால் அவருடைய கரத்தில் இருக்கிறேன். பார், அவர் என்னைப் பிடித்தார். நீ நேசிக்கப்படக் கூடாதவனாக இருக்கையில் அவர் உன்னை நேசித்தார். அன்றைக்கு அந்த கறுமை நிறமுள்ள சகோதரி சொன்னது போல, தன்னுடைய சாட்சியில், ''நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை, நான் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகிறேனோ அப்படியும் நான் இல்லை. ஆனால், நான் முன்பு இருந்ததைப் போல் இப்பொழுது இல்லை. அவளுக்கு ஏதோ நேர்ந்தது, அவள் ஏதோ ஓரிடத்திற்கு வந்திருக்கிறாள் என்பதை அறிந்திருந்தாள். அந்த விதமாகவே அது இருக்கிறது. அவரிலிருந்து பிரிக்கப்பட்டு அந்நியனாக இருந்த போது அவர் என்னை எவ்வளவாக நேசித்து என்னை அடையும்படி எவ்வளவாகத் தாழ்த்தி என்னைத் தூக்கி எடுத்தாரோ, அந்த அன்பு, அவர் என்னை உபயோகிக்க விரும்புகிறார் என்ற அந்த நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது. அவர் அப்படிச் செய்ததில் ஒரு நோக்கம் இருக்கிறது. அவர் என்னில் எதையோ கண்டார். அதைப் போலவே உன்னிலேயும் அவர் எதையோ கண்டார். இரட்சிக்கப்படாதோரைக் கவனி. உன்னோடு கூட லட்சக்கணக்கானோரை அவர் தெரிந்தெடுத்திருக்கலாம். ஆனால் உன்னை மாத்திரம் அவர் தூக்கி எடுத்தார். ஆமென்! உன்னுடைய இடத்தை யாரும் எடுக்க முடியாது. ஆமென்! நீ தேவனுடைய பொருளாதாரத்தில் இருக்கிறாய். வேறொருவரும் அதைச் செய்ய முடியாது. அவர் உன் மீது உனக்காகச் செலுத்தும் அன்பு. அப்படியிருக்க உன்னுடைய அன்பு அவர் மீது செலுத்தப்படுமா? அது ஒரு காதல் விவகாரம். எந்தவிதமான சந்தர்ப்பமாக இருந்தாலும் சரி, அந்த சூழ்நிலைகள், அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அது விசுவாசத்தை உற்பத்தி செய்யும். தேவன் உன்னை நேசிக்க, நீ தேவனை நேசிக்க, நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்க அதுவே விசுவாசத்தைக் கொண்டு வருகிறது. அது சரி. தேவன் தாம் செய்யப் போவதாகக் கூறும் (வாக்குப்பண்ணிய) அந்தக் காரியத்தை இந்த விசுவாசம் வெளிக் கொணராமல் இருக்க முடியாது. 54இப்போது கவனி! பரிபூரண விசுவாசம் தூய்மையாக இருக்கிறது. அன்பு தூய்மையானதாக இருப்பது போன்று விசுவாசம் இருக்கிறது. பார்? இப்பொழுது நீ ஒருவரை நேசிக்கும் பொழுது... நீ உன் புருஷனை நேசிக்கிறாய் அல்லது உன் மனைவியை நேசிக்கிறாய் இப்போதும் யாரும் உன்னைப் பார்த்து நீ அப்படிச் செய்யாதே என்று சொல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் நீ அதைச் செய்கிறாய், நீ செய்வதை அறிந்தே செய்கிறாய். இப்பொழுது நான் உன்னை நோக்கி, ''நீ செய்வதை எவ்விதமாக நிரூபிப்பாய்'' என்று கேட்டால், “ஓ! நான் அவருக்காக எவ்விதம் ஜீவிக்கிறேன் என்பதின் மூலம் நான் நிரூபிக்கிறேன். நான் ஒரு உண்மையுள்ள நேர்மையான மனைவி. நான் ஒரு விசுவாசமுள்ள நேர்மையான கணவன். அதுவே நான் என் மனைவியையோ அல்லது என் கணவனையோ நேசிக்கிறேன் என்று நிரூபிக்கின்றது. பார், உன் வாழ்க்கை நீ யார் என்பதை நிரூபிக்கின்றது. அது போலவே, கிறிஸ்தவ பக்தியும், பார், உன்னுடைய விசுவாசம், நீ ஒருவரிலொருவர் நம்பிக்கை வைத்திருத்தல்; இவையெல்லாம் தூய்மையானதாக இருக்கிறது. மற்ற ஒருவருக்குக் காண்பிக்கப்பட முடியாத ஏதோ ஒரு உண்மையானது இருக்கிறது. இருந்தபோதிலும் நீ அதைப் பெற்றிருக்கிறாய், உன்னுடைய செயல்கள் அவற்றை நிரூபிக்கிறது. 55உன்னுடைய நண்பனிடத்தில் செலுத்தும் அன்பைப் போல, உனக்கு கலப்படமில்லாத தூய்மையான விசுவாசம் கிடைத்திருந்தால், அதை நீ உன் ஜீவியத்தின் மூலமாக நிரூபிக்கிறாய். இனி நீ முறுமுறுக்காமல் அது நடந்தாயிற்று என்று அறிந்து முன் செல்லுகிறாய். காரியங்கள் எப்படிக் காணப்பட்டாலும், மற்றவர்கள் என்ன கூறினாலும் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமே. அது முடிந்தது என்று உனக்குத் தெரியுமே. உன் கணவனை நேசிப்பது உனக்குத் தெரிந்ததைப் போலவும் அது இருக்கிறது. பார். அன்பும், விசுவாசமும், ஒன்றோடொன்று இணைந்து இருக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் உறவினர்கள். அவர்கள் நேசிக்கிறார்கள். அன்பு விசுவாசத்தை உற்பத்தி செய்கிறது. 56சாத்தான் நம்மைச் சோதிக்கையில் இயேசு செய்தது போல அவனை நாம் பரிபூரண வார்த்தையிலும் பரிபூரண விசுவாசத்திலும் எதிர்க்க வேண்டும். தேவனுடைய வார்த்தை பரிபூரணமாக இருக்கிறது. நாம் இந்தப் பரிபூரண வார்த்தையில் இந்தப் பரிபூரண விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது, நாம் சீக்கிரமாக, எவ்வளவு வேகமாக முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் செல்வோம். அவருடைய விசுவாசத்தினாலே, அவருடைய வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தினாலே (அவர் ஜெயித்தது போன்று), நாமும் எதையும் ஜெயிக்கலாம் - மரணமோ, நரகமோ, கல்லறையோ எதையும் ஜெயிக்கலாம். அவர் சந்தித்த எல்லா காரியங்கள் மீதும் அவர் வெற்றி பெற்றது போல, தேவன் தேவனாக இருக்கிறார். தேவன் பரிபூரண தேவனுடைய வார்த்தையின் மீது பரிபூரண விசுவாசங் கொண்டு ஜெயித்தார். மரணமானது அவருடைய பிரசன்னத்தில் தரித்து நிற்க முடியவில்லை. வியாதியோ அவர் பிரசன்னத்தை விட்டோடிற்று. அவரிடத்திலிருந்து வல்லமையின் நதிகள் இடைவிடாமல் புறப்பட்டு, பாய்ந்தோடிற்று. அவருடைய அங்கியிலிருந்தும் வல்லமை சென்றது. இந்த நிழல்களில் கிடக்கின்ற ஜனங்கள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தங்கள் விரலினால் தொட்டு சொஸ்தமடைந்தனர். அந்த ஸ்திரீக்கு நடந்ததைக் கண்ட ஜனங்கள் அவருடைய வஸ்திரத்தைத் தொட விரும்பினர். ஏனென்றால் அவரிடத்திலிருந்து நதிகளைப் போல், தொடர்ந்து, இடைவிடாமல் வல்லமை புறப்பட்டுச் சென்றதைக் கண்டனர். அவர் அங்கே பரிபூரணத்தோடு சென்றதைக் கண்டனர். அவர் அங்கே பரிபூரணத்தோடு கூடிய விசுவாசத்துடன் உள்ள ஓர் உலகில் நடந்து கொண்டிருந்தார். ஏனென்றால் அவரே வார்த்தையாக இருந்தார். மேலும் இப்போது, ''நீங்கள் என்னில் நிலைத்திருந்தால்“ அவர் மூலமாக, அவர் உனக்கு வார்த்தையைக் கொண்டு வந்தார்; ''மேலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்”, அவர் நடந்த விதமாக நீ நடக்கவேண்டும்; உன்னிலிருந்து வல்லமை பாய்ந்தோட, தேவனுடைய ஆசீர்வாதத்தின் ஊற்றுகள் ஆறுகளாகப் பாய்ந்து ஜனங்களுக்குச் செல்லவேண்டும். நான் சொல்லுகிறது புரிகிறதா? நீ பொய்யைச் சொல்லவில்லை, நீ அதைக் கற்பனை செய்யவில்லை. அது நடந்து கொண்டிருக்கிறது. அதை நீ காண்கிறாய்; நீ அதைக் கற்பனை செய்து கொண்டிருந்தால், அது உனக்கு ஒரு நன்மையையும் செய்யாது. ஆனால் அது உண்மையாக அங்கிருந்தால், அது உண்மையாகவே நடக்கிறது. 57இப்பொழுது கவனி! பார், அதனாலே அவர் நின்று “இந்த சரீரத்தை (இந்த ஆலயத்தை) நீங்கள் அழித்தால், நான் மூன்று நாட்களில் திரும்பவும் எழுப்புவேன்'' என்றார். ஏன்? தாம் செய்யப் போகிற அந்தக் காரியத்தில் அவர் திருப்தி அடைந்திருந்தார். ஏனென்றால் வேத வாக்கியங்கள் அவர் அதைச் செய்வார் (மேசியா) என்று சொல்லியிருந்தது. ”நான் அவர் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடேன். என்னுடைய பரிசுத்தரின் அழிவைக் காணவொட்டேன்'' ஒரு தீர்க்கதரிசி தன்னிடம் வார்த்தை வந்தபொழுது அது நடக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தனர். அது அவரே என்று இயேசு அறிந்திருந்தார். மேலும் இயேசு தாமே அப்பொழுது... “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்று சொன்னார்'', வியாதியஸ்தர் மீது அவர்கள் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். இப்படிச் செய்தால், “கைகள் என் மீது வைக்கப்படும் போது நான் சுகமடைவேன்'' என்ற அதே நம்பிக்கை உனக்கு இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அந்த விதமாகக் கூறினார். அவர், “இந்த சரீரத்தை அழித்துப் போடுங்கள், நான் அதை எழுப்புவேன்” என்றார். ஏனென்றால் அவரே அந்த மேசியா என்று அவர் அறிந்திருந்தார். ''என் பரிசுத்தருடைய அழிவைக் காணவொட்டேன்'', அவரே அந்தப் பரிசுத்தர் என்பதை அவர் அறிந்திருந்தார். “அவருடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடேன்” அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் அதை நிறைவேற்றுவாரென்று அவர் அறிந்திருந்தார். அவர் மரணத்தையும் பாதாளத்தையும் வெல்வதற்காக அங்கிருந்தார் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. “இதை உனக்கு இஷ்டமானால் அழித்துப் போடு, நான் திரும்பவுமாக மூன்று நாட்களுக்குள் எழுப்புவேன்'', ஓ! என்னே! ”என் ஜீவனை கொடுக்கவும் அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு“ அவர், தாம் யார் என்று அறிந்திருந்தார். 58நீ ஒரு கிறிஸ்தவன். இயேசு உனக்காக மரித்து சம்பாதித்த இரட்சிப்பின் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் உனக்கு உரிமை உண்டு. அவைகளெல்லாம் உன்னுடையதே! அதற்காக எல்லாம் செலுத்தப்பட்டுவிட்டது. நீ அதை விசுவாசிக்க மாத்திரம் வேண்டும். அது கற்பனையல்ல; ஆனால் அதை விசுவாசி. மேலும் அது உன்னுடையதென்று உனக்குத் தெரியும். மேலும் நீ அதை உன்னுடைய சொந்தமாக்கிக் கொள்கிறாய். ஓ, அதுவே வெற்றி சிறக்கப் பண்ணுகிற விசுவாசம்; தெரிந்து கொள் நாம் இப்போது... அது நடக்கும் என்று முன்பே அறிந்திருந்தார். அவர் நடக்கும் என்று கூறியதெல்லாம் நடந்தது. ஏனென்றால் அது நடக்கும் என்று அவர் அறிந்திருந்தார். மேலும் எதெல்லாம் நடக்கும் என்று சொன்னாரோ அதெல்லாம் நடந்தேறியது. இப்பொழுது கவனி! இயேசு சொன்னதையெல்லாம் தேவன் கனப்படுத்தி அதை நிறைவேற்றினார். அதைச் சிந்தித்துப் பார். இயேசு சொன்னதையெல்லாம் தேவன் நடந்தேறும்படி செய்தார். ஆகையால், தம்முடைய வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகள் என்று அவர் அறிந்திருந்தார், இப்போது பார் அதே வேதவாக்கியம் நமக்கு மறுபடியுமாகத் திரும்ப வருகிறது. ''இந்த மலையைப் பார்த்துச் சொல்வாயானால்“, ஓ! என்னே? அது இன்னும் கொஞ்சம் உங்கள் இருதயத்தில் ஊறட்டும். ஏனென்றால் நாம் இன்னும் சிறிது நேரத்தில் ஜெபவரிசை உண்டாக்கப் போகிறோம். நாம் சபையாரை அனுப்பிவிட்டு வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். யார் யார் ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ. 59பார்! தாம் தேவனைப் பிரியப்படுத்துகிறார் என்று அவர் அறிந்திருந்தார். தம்முடைய ஜீவியம் மாசற்றது என்று அவர் அறிந்திருந்தார். அவர் ஞானஸ்நானம் எடுத்த அன்று, ஏற்கனவே தேவன் அவரைப் பற்றி இந்த விதமாக சாட்சி சொல்லியிருந்தார். ''இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவி கொடுங்கள்! நான் இவரில் வாசம் பண்ணும்படியாக பிரியமாயிருக்கிற என்னுடைய நேசகுமாரன்“ என்று கூறினார், ''இதை என்னுடைய வாசஸ்தலமாக்கிக் கொள்ள நான் மகிழ்ச்சியடைகிறேன். இவருக்கு எந்த ஆக்கினைத் தீர்ப்பும் இல்லை'' என்றார். இப்போது, அதே தேவன் உன்னிடத்தில் வந்து உன்னில் வாசஞ்செய்ய விரும்பும்போது, உன் வார்த்தையை கனப்படுத்தும்போது உன்னுடைய தீர்மானத்தை... யோசுவாவின் தீர்மானம் என்ன? “தரித்து நில், சூரியனே!'' அது அங்கே தரித்து நின்றது. ஆமென்! நிச்சயமாக!மோசேயின் தீர்மானம் என்ன? தன்னுடைய கோலை நதியின் மீது அவ்விதமாக பிடித்து சமுத்திரத்தைத் திறக்கும்படியாக அழைத்தான். அது வழிவிட்டு நின்றது. பார், அது நீ எதைக் கேட்டாலும் என்பதில் அடங்கியிருக்கிறது. ''மேலும் நீ அந்த மலையைப் பார்த்து”, “பெயர்ந்து போ'' என்று சொல்லி சந்தேகப்படாமல் இரு (பார், உன் இருதயத்தில்) ''நீ சொன்னது நிறைவேறும், உனக்குக் கிடைக்கும் (நீ சொன்னதெல்லாம்) அது உன்னை வார்த்தைக்கு திரும்பக் கொண்டு வருகிறது. அது வெண்ணையெடுத்த பால் அல்ல. உன்னைத் திரும்பவும் அது வார்த்தையில் நிறுத்துகிறது. இங்கே அது உங்கள் தலைக்கு மேல் குதித்து ஓடி விடும் என்று அறிவேன். பார், ஏனென்றால் அது நங்கூரம் பாய்ச்ச முடியாது. ஆனால் உண்மையான தூய்மையான விசுவாசம் அதை பிடித்துக் கொள்ளுகிறது இங்கேயே. 60நான் பார்த்திருக்கிறேன், சிநேகிதனே, இங்கே வேதம் திறந்த வண்ணமாக என் முன்னே இருக்கிறது. அது நடந்ததைப் பார்த்திருக்கிறேன். அது சத்தியம் என்பதை அறிவேன். பரலோகத்தின் தேவன், இந்த செய்தியை முடிப்பதற்கு, ஒருவேளை என்னால் முடியாமல் போய்விடலாம் என்றறிவார். ஆனால் அது நடந்தது என்பதை அறிவேன். நானாகவே பார்த்திருக்கிறேன். அந்த வார்த்தை நிறைவேறியதற்கு நான் ஒரு சாட்சி. (நிறைவேறிக் கொண்டிருப்பதற்கு) அது சத்தியம் என்று நான் அறிவேன். அதைச் சொல், “அங்கே தரித்து நில்”, உன் கண்களுக்கு முன்பாக சிருஷ்டிகர் ஒரு ஜீவராசியை சிருஷ்டித்து, அதை நிறுத்துகிறார். உன் தலையை அசைத்து, ஆச்சரியப்படுகின்றாய். பின்பு நீ சுற்றிப் பார்த்து அவர் மற்றொன்றைக் கொண்டு வருவதைக் காண்கிறாய். மற்றதைப் போலவே அது இருக்கிறது. ஏனென்றால் நீ அப்படிச் சொன்னாய். மீண்டும் நீ இங்கே வந்து, ''அங்கே மற்றொன்று வரக் கடவது“ என்பாய். பார். அங்கே அது இருக்கிறது! இப்பொழுது, இது சத்தியமாயிருக்கிறது. 61ஓ, நாம் எப்படி இருக்கவேண்டும்? அதுதான் பரிபூரண விசுவாசம். தரிசனம் இல்லை, “வார்த்தையை மாத்திரம் பேசு'' அணிலைப் பார்க்கவேயில்லை. அவர் இந்த வேத வாக்கியத்தை... ''பேசு! உன் இருதயத்தில் சந்தேகப்படாதே”. ஆனால் நீ என்ன சொல்லுகிறாயோ அது அங்கே இருக்கும் மேலும் தேவன் சொன்ன வார்த்தையை அப்படியே விசுவாசித்தேன், அது அங்கே இருந்தது. அதுசரியே, அது அவ்வளவு வல்லமையுள்ளதாக மேலும் சிநேகிதனே, உன்னுடைய போதகர் என்னும் முறையில் நான் கூறுகிறேன். யோசுவா சூரியனை நிற்கப் பண்ணினது போல் அது அவ்வளவு வல்லமை உள்ளதாக இருக்கும். சூரியன் அங்கே ஏற்கனவே இருந்தது, மற்ற கிரகங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவன் அந்த அசைவை நிறுத்திப் போட்டான். ஆனால் இவ்வமயம், அங்கே இல்லாத ஒன்றை அவர் கொண்டு வந்தார், அவர் சிருஷ்டித்தார்! நான் காணாத ஒரு நாளில் இந்த பூமியின் தூளை எடுத்து, நான் கல்லறையில் வைக்கப்பட்ட பிறகு, என்னைத் திரும்பவுமாக ஜீவனுக்குள் அழைக்கும் தேவனோடு நட்புக் கொள்வதைக் குறித்து சந்தோஷப்படுகிறேன். ஓ! என்னே! அது இங்கே இருக்கிறது. என் விசுவாசம் மேல் நோக்கி உம்மைப் பார்க்கிறது, ஓ! கல்வாரியின் ஆட்டுக்குட்டி யே, நீ அதைச் சொல், சந்தேகப்படாதே. ஆனால் நீ சொன்னதை முழுவதுமாக விசுவாசி, நீ சொன்னதைப் பெற்றுக் கொள்வாய். பார், அது நடக்கும் என்று விசுவாசி. 62தாவீது சங்கீதத்தில் அவரைக் குறித்துப் பேசுகிறான். அதோடு அவர் தன்னுடைய வல்லமையை எடுத்து மற்றவர்களுக்கு ஊழியம் செய்தார். அவர் அதை தமக்குத் தானே வைத்துக் கொள்ளாமல் அதை உபயோகித்து அதினாலே ஊழியம் செய்தார். எவ்வளவு மோசமான நிலையிலிருந்தவர்களையும் அவர் இரட்சித்தார். அவர் இப்போதும் அதைச் செய்ய வல்லவராய் இருக்கிறார். தமது வார்த்தையில், விசுவாசிகளுக்கு அதே விசுவாசத்தை வாக்குப் பண்ணியிருக்கிறார். யோவான்: 14:12. அவர் அவ்விதமாகச் சொன்னார். மாற்கு: 16 மற்றும் மாற்கு: 11:23. நாம் அதை சற்று முன்பு வாசித்தோம். 63இப்போது, கவனி. இப்போது அவர், அன்றைக்குப் பழைய ஏற்பாட்டில் அவர்களுக்குச் செய்தது போலவும், அதைப் போல புதிய ஏற்பாட்டில் செய்ததைப் போலவும், நமக்கும் அதே விதத்தில் தோன்றி, அதே வார்த்தையையும் அதே கிறிஸ்துவையும் நமக்குக் காண்பிக்கிறார். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கிறிஸ்துவே பரிசுத்த ஆவியானவர். கிறிஸ்து என்னும் வார்த்தைக்கு, 'அபிஷேகம் பண்ணப்பட்டவர்' என்று அர்த்தம். அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர், அதுவே கிறிஸ்து, அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர். எத்தனை பேருக்கு அது உண்மை என்று தெரியும் (அது நல்லது) அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர், அங்கே ஒரு மனிதன் அபிஷேகம் பண்ணப்பட்டவராய் இருக்கிறார், எதினாலே அபிஷேகம் பண்ணப்பட்டவர்? அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் நாசரேத்தூரனாகிய இயேசு, தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் மனிதன், பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட, பெரிய காரியங்களையும் கிரியைகளையும் செய்து கொண்டு சுற்றித் திரிந்தார். பார், தேவன் வெளிப்படுத்தப்பட்டு இந்த மனுஷனிலே அவர் இருந்தார் என்று நிரூபித்தார். 64மேலும் இப்பொழுது நாம் அதே ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாக்களாகவும் கடைசி நாளின் மேசியாக்களாகவும், அவருடைய (இயேசு கிறிஸ்துவினுடைய) உயிர்த்தெழுதலை பிரகாசிப்பிக்கிறவர்களாகவும், அவர் மரித்த தேவனாக இல்லை, மரித்து உயிர்த்தெழுந்தவராக, ஆனால் பரிசுத்த ஆவியின் வடிவில் அவர் தம் மக்களில் இருக்கிறார். தம்முடைய மணவாட்டியின் மத்தியில் அசைவாடி, அவளுடனே காதல் விவகாரத்தில் ஈடுபட்டவராய் தம்மையே அவளுக்குள் ஊற்றினவராக இருக்கிறார் என்று காண்பிக்க நாம் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறோம். அவர்கள் கலியாண விருந்திற்காக ஒருவராக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். அதே அடையாளங்களுடன், அதே தேவன், வாக்குப் பண்ணின அதே வார்த்தையில், தம்முடைய அதே வெளிப்படுத்தல்களைச் செய்து கொண்டிருக்கிறார். அதை விசுவாசிப்பதைத் தவிர, நாம் வேறொன்றும் செய்ய முடியாது. மேலும் விசுவாசம் என்பது அந்தப் பொருளாக இருக்கிறது. அது ஒரு பரிபூரண விசுவாசத்தை சிருஷ்டிக்க செய்கிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள். நாம் இதைப் பற்றி எவ்வளவு உணர்வில்லாதவர்களாக இருக்கிறோம், ஒரு நிமிஷம் அதை யோசித்துப் பாருங்கள். 65இப்போது, நாம் பார்ப்போம். எல்லாக் காரியங்களையும் அவர் நன்றாகச் செய்திருக்கிறார் அல்லவா? அவர் கூறிய விதமாகவே நடந்ததைத் தவிர வேறு எதையாவது நம்மிடத்திலே கூறியிருக்கிறாரா? அவர் அதை நடப்பிக்கவில்லையா? அந்தப் பெரிய அக்கினி ஸ்தம்பம் நம் மத்தியிலே இருந்து, அவர் வாக்குத்தத்தம் பண்ணின பிரகாரமே அதைச் செய்யவில்லையா? அதை நாம் காணவில்லையா? எவ்விதமாக நடக்கும் என்று முன்கூறிய பிரகாரமே, விஞ்ஞானமானது அதை புகைப்படம் எடுக்கவில்லையா? திரும்பவுமாக நீ சென்று பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலும் அதைப் பார்த்து, அதை எடுத்து அதைக் காண்பித்து, அநேக மாதங்களுக்கு முன்பாக நடக்கும் என்று சொல்லப்பட்டது நடக்கவில்லையா? என்பதை நீ அறிந்து கொள். அவர் பழைய ஏற்பாட்டிலே செய்த பிரகாரமே புதிய ஏற்பாட்டிலும் செய்து, இப்போதும் அவைகளின் பிரகாரமே அதையே செய்யவில்லையா? அதே பரிசுத்த ஆவியானவர் வந்து, எண்ணங்களை வகையறுக்கவில்லையா? தேவனுடைய இருபுறமும் கருக்குள்ள பட்டயமானது எண்ணங்களை வகையறுத்து, இருதயத்தின் தோற்றங்களை (நோக்கங்களை) நிதானிக்கவில்லையா? அது அதே தேவனில்லையா? அதே அவர், ஏதோ தூரத்திலுள்ள ஒரு அந்நியராய் இராமல், இங்கே அவர் இருக்கிறார். இங்கே அவர் இருக்கிறார், ஒரு பரிபூரண விசுவாசத்தை சிருஷ்டிக்கும்படியாக அவர் இங்கே இருக்கிறார். நான் அவரை உணருகிறேன். இப்பொழுது அவர் இங்கே இருக்கிறார். அவருடைய ஆவி இங்கே இருக்கிறது என்பதை நான் அறிவேன். அவர் எல்லாக் காரியங்களையும் அறிகிறார் என்று எனக்குத் தெரியும். ஆமென்! அவர் ஏதாகிலும் ஒன்றைச் செய்ய விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும். அவர் எதையாகிலும் செய்து கொண்டிருக்கிறார். ஜனங்களில் இந்தப் பரிபூரண விசுவாசத்தை (விசுவாசத்தைப் பரிபூரணப்படுத்துகிற இந்தக் காரியத்தை) செய்யும்படியாக இங்கே இருக்கிறார். 66நோவாவின் நாட்களில் இருந்ததைப் போல, எட்டு ஆத்துமாக்கள் மாத்திரம் இரட்சிக்கப்பட்டு, நித்தியத்துக்குள்ளே நாம் நடந்து செல்லப் போகிறோமா? நாம் லோத்தைப் போல மூன்று பேர் மாத்திரம் சோதோமை விட்டு வெளிவரப் போகிறோமா? யோவான் ஸ்நானகன் நாட்களைப் போல ஆறு விசுவாசிகளோடு வரப்போகிறோமா? அவருடைய கிரியைகள் பரிபூரணமாய் இருப்பதால் அவரை நாம் நம்புவோம், விசுவாசிப்போம். அவைகள் தினந்தோறும் வெளிப்படுத்தப்பட்டு, அவரே அந்த... ''வார்த்தை“யாக காண்பிக்கப்பட்டு, நமக்கு முன் பரிபூரணமாக வெளிப்படுத்தப்படுகிறார். 'எபிரேயர்' நான்காம் அதிகாரம் சொல்லுகிறது: (எபிரேயர்: 4:12). ”தேவனுடைய வார்த்தையானது, ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும் கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' அதை நீ யோசித்துப் பார்! தேவனுடைய வார்த்தை அதுவாக இருக்கிறது. அது இருதயத்தின் யோசனைகளை பகுத்தறிகிறதாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையானது, ஜீவனும், வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. வார்த்தை மாம்சமானார்! அல்லேலூயா! வார்த்தையானது வேதவாக்கியங்களின் அடையாளங்களோடு உலகப் பிரகாரமான அடையாளங்களினாலும், விஞ்ஞான அடையாளங்களினாலும் மனித மாம்சத்தில் (சரீரத்தில்) கிரியைச் செய்து பரிபூரணப்படுத்தி, உன்னைப் பரிபூரண விசுவாசத்துக்குள் கொண்டு வந்து, ஒரு பரிபூரண எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு உன்னை ஆயத்தப்படுத்துகிறது. 67அதை ஏன் நாம் காணக்கூடாது? அது ஒரு மாய்மாலத் தோற்றமல்ல! பிசாசானவன் நீ அதை விசுவாசிக்காதபடி உனக்கு முன்னால் உலகத்தினுள் எல்லாக் காரியத்தையும் வைத்திருக்கிறான். ஒரு கூட்டத்தை கொண்டு வந்து உனக்கு முன்னால் எல்லாவற்றையும் தூக்கி எறிய முயற்சிப்பான். உன்னிலிருந்து அதை உதறிப்போடு வேதம் சொல்லுகிறது. “எழும்பி, உன்னையே உதறிக் கொள்” உன்னைக் கிள்ளிப் பார். இங்கே ஆவியானவர் இருப்பாரானால் அவர் உன்னை அறிகிறார். நீ செய்ய வேண்டியது ஒன்றே! அதை விசுவாசித்து, அதை ஏற்றுக் கொள். இதை நீ விசுவாசிக்கிறாயா? உனக்குள் என்ன இருக்கிறதென்று அவர் அறிகிறார். நீ யார் என்றும் என்னவென்றும் அவருக்குத் தெரியும். உன்னுடைய வாஞ்சை என்னவென்று அவர் அறிகிறார், உனக்குத் தேவை இன்னதென்றும் அவர் அறிவார். ஜிம்! அந்தக் குழந்தையை அவர் அறிவார் என்று உனக்குத் தெரியுமா? நூற்று ஐந்து டிகிரி காய்ச்சலை நீ செல்லுமுன் அவனிடமிருந்து எடுத்துவிட்டார் என்று அறிவாயா? அவர் அதைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? இன்றே வா, “அது உன்னை விட்டு நீங்கும்'' என்று சொல், நான் அங்கே நோக்கிப் பார்த்து அவர்கள் விட்டுச் செல்வதற்கு முன் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நான் பார்க்கிறேன். இப்போது அது உண்மையாக இருக்கிறது. 68திருமதி. லிட்டில், தேவன் உங்களுக்கு அந்த சர்க்கரை வியாதியின் மீது வெற்றி தருவார் என்று விசுவாசிக்கிறீர்களா! உங்களுக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிற அந்த ஸ்திரீ, அவள் மீது தேவனுடைய ஆவியானவர் இருப்பதை அறிவீர்களா? அவள் தன் சிறு குழந்தைப் பற்றி அவள் கவலைப்படுகிறாள். அவளுக்கு அவளுடைய சிறு குழந்தைக்கு கண் மீதோ அல்லது எதிலோ ஆப்ரேஷன் நடக்க வேண்டியிருக்கிறது. அவள் சிகாகோவிலிருந்து வந்திருக்கிறாள். “இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைக் காட்டிலும் கருக்குள்ளதாக, எண்ணங்களை வகையறுக்கிறவராக'', அது என்ன? வார்த்தையே! அதை விசுவாசிக்கிறாயா? நிச்சயமாக. அங்கே அடுத்த வரிசையில் ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருக்கிறாள், உனக்கு ஒரு கண் ஆப்ரேஷன் நடந்தது. ஆனால் சரியாக அது நடக்கவில்லை. நீ அது சரியாகிவிடும் என்று விசுவாசிக்கிறாயா? அதை நீ விசுவாசிக்கிறாயா? அது சரியே நீ சொஸ்தமாக்கப்பட்டாய். நீ அதைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். திருமதி. பெக்கன்போ, இது உனக்கல்ல. இங்கே உள்ள இந்த பேரனுக்காக. நீ அதற்காக ஜெபிக்கிறாய். ஆனால் தேவன் அதைச் சரி செய்ய வல்லவர் என்று விசுவாசிக்கிறாயா? அவனுக்கு என்ன வியாதி என்று தேவன் என்னிடத்தில் சொல்லக் கூடும் என்று விசுவாசிக்கிறாயா? வைத்தியர்களுக்கு என்ன வியாதி என்று தெரியவில்லை. இல்லை. அது சரியே. வீங்கிப்போன நுரையீரல்கள். அது சரியே. அவனுக்கு ஓர் இரத்த வியாதி. சரியே! அவன் பள்ளிக்குச் செல்ல இயலுமா, இல்லையா என்று குழப்பமடைந்துள்ளீர்கள். “இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைக் காட்டிலும் அதிக வல்லமையுள்ளது, கருக்குள்ளது”. 69பசியை இழந்து கொண்டே போகிற ஒரு ஸ்திரீயை நான் பார்க்கிறேன், அவள் இங்கு எங்கோ இருக்கிறாள். அவள் முகத்தை நான் பார்க்க வேண்டும். ஆம்! இதோ அங்கே இருக்கிறாள். அவள் பெயர் திருமதி. லூஎல்லன். அவள் தன் முழு இருதயத்தோடும் தன் வயிற்றுத் தொந்தரவு நீங்கிவிட்டது என்று விசுவாசித்தால் அது நீங்கிவிடும். ஆமென்! இங்கே ஒரு ஸ்திரீ, மற்ற ஸ்திரீக்குக் குறுக்காக இந்த வரிசையின் கடைசியில் அமர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் கண்ணாடி அணிந்திருக்கிறாள். அவளுக்கு வாதநோய் (முடக்குநோய்) இருக்கிறது. அது உன்னுடைய, இடது கையில் இருக்கிறது; இருந்தது, இப்பொழுது இல்லை. நீ விசுவாசித்தால் சுகம் உனக்கே! அங்கே பின்னாலே இருக்கிற அந்தச் சின்னக் குழந்தையைப் பற்றி என்ன? அது ஓஹையோ பட்டணத்திலிருந்து வந்திருக்கிறது. அதற்கு கண்ணிலே புற்றுநோய், தேவன் அதைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? அவர் அப்படியே செய்வார். நீ அதை விசுவாசி, அக்ரோன் என்ற ஊர், ஒஹாயோ பட்டணத்திலுள்ளது. தேவன் அதைச் செய்வார் என்று விசுவாசிக்கிறாயா? ஆம், அவர் அதைச் செய்வார். அது என்ன? “அதிக வல்லமையுள்ள எதைக் காட்டிலும் கருக்கான...'' இங்கே ஒரு சின்ன நர்ஸ், அவளுக்கு ஏதோ ஏற்பட்டு, ஒரு கஷ்டம் அவளுடைய தோள்பட்டையில் இருக்கிறது. அது சரியே. அது சரிதானே? நல்லது, அதை விசுவாசி, அது உன்னை விட்டு நீங்கும். பார்? “தேவனுடைய வார்த்தை, இருதயத்தின் எண்ணங்களையும் தோற்றங்களையும் வகையறுக்கிற ஒன்று”. 70இந்தக் கட்டிடத்திலே ஜெப அட்டைகள் ஒன்றுமில்லை. இங்கே ஜெப அட்டைகளைக் கொடுக்க ஆள் இல்லை. ஒழுங்கைப் பின்பற்றுவதற்காக, நாங்கள் ஜெப அட்டைகளை விநியோகம் செய்கிறோம். வார்த்தையானது மாமிசத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் போது எத்தனை பேர் ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? ஒவ்வொருவராக ஒவ்வொரு வரிசையாக இங்கே கைப்பிடி உள்ள மேடைக்கு வாருங்கள், ஒரு வரிசை முடிந்தவுடன் மறு வரிசை வாருங்கள். இப்படியாக எல்லா வரிசையும் வாருங்கள். ஜெபிக்கப்பட விரும்புகிற அனைவரும் அப்படியே செய்யுங்கள். ''உருவக்குத்துகிற மிகவும் வல்லமையுள்ள“ இருபுறமும் கருக்குள்ள பட்டயம் அவ்விதம் செய்யமுடியுமா? இல்லை ஐயா ஆனால் தேவனுடைய வசனம் அப்படிச் செய்ய முடியும். ஏன்? அது தேவனுடைய வசனம்.இப்பொழுது அதை நீ விசுவாசிக்கிறாயா? மாபெரும் வைத்தியர் டென்னஸ்ஸி பட்டணத்திலிருந்து வந்த சகோதரி அங்கிரன் எங்கே?... டௌணிங்? ''மாபெரும் வைத்தியர் இப்பொழுது இங்கே இருக்கிறார்“ என்ற பாடல். ஃபோர்ட் வேய்னில் அன்றிரவு நடந்ததை நான் ஒருக்காலும் மறக்கமாட்டேன். அன்று அந்தச் சிறிய ஆமிஷ் பெண் அல்லது டங்கார்ட் இங்கே உட்கார்ந்திருக்கையில், ''மாபெரும் வைத்தியர் இங்கே இப்போது இருக்கிறார்“ என்ற அந்தப் பாட்டை பியானோவில் வாசித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிறு பையன் குணமானதைக் கேட்டு அவள் குதித்தெழுந்தாள். பரிசுத்த ஆவியானவர் அவள் மீது விழ, அவளுடைய அழகான கூந்தல் அவளுடைய தோள்களின் மீது விழ, அந்தப் பியானோ ஒரு சுருதி கூட தப்பாமல் தானாகவே, ”அந்த மாபெரும் வைத்தியர் இங்கே இருக்கிறார். இரக்கப்படும் இயேசு“ என்னும் பாட்டை இசைத்தது. இயற்கைக்கு மிகவும் மேம்பட்ட சக்தி பியானோ கருவியை வாசிக்க, ”மாபெரும் வைத்தியன் இங்கே அருகில் இருக்கிறார்“ என்ற பாட்டு வாசிக்கப்பட்டது. 71பார், நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்க வேண்டும்! இப்போது ஞாபகம் வை, நீ கடந்து செல்லும்போது, இப்பொழுது நீ விசுவாசிக்காவிட்டால், இங்கே வர வேண்டாம், அங்கேயே உட்கார்ந்து கொள். “நான் போக... அதை விசுவாசிக்கும் ஓர் மகன் நான், அதை விசுவாசிக்கும்படியாக வருகிறேன்'' என்று சொல். நான்... வேதம் சொல்லுகிறது, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். விசுவாசிக்கிறவர்கள் வியாதியஸ்தர்கள் மீது கைகளை வைத்தவுடன் அவர்கள் சொஸ்தமடைவார்கள்'', அது மிகவும் சரியே. இப்பொழுது ”நீ அதை விசுவாசித்தால்'' என்ற அந்த நிபந்தனைகளில், இப்பொழுது நான்... ஆகையால்; அதை உனக்கு நிருபித்தேன், அதை நான் விசுவாசிக்கிறேன். அதைப் பார்...?அவர் தமது வார்த்தையை வெளிப்படுத்தி, அவருடைய வார்த்தை என்று காண்பிக்கிறார். அதை நிருபிக்க, அது ஒரு வேத நிறைவேறுதலாயிருக்கிறது. நீ கடந்து செல்லும் போது, அதை விசுவாசிக்க வேண்டும். அதை நீ செய்வாயா? நான் உன் மீது கைகளை வைக்கும் போது... அதையே வேதம் சரியாகச் சொல்லுகிறது. 72சகோதரன் நெவில், இங்கே அபிஷேகிக்கப்பட்ட எண்ணெய் உள்ளதா? அதை எடுத்துக் கொண்டு இங்கே மேடைக்கு வாருங்கள். அது வேதத்தை நிறைவேற்றுவதாக இருக்கட்டும். இந்தப் பக்கம் வந்து கடந்து செல்லுகின்ற ஒவ்வொருவரையும் எண்ணெய் பூசி ஜெபியுங்கள். இப்போது விசுவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் கரத்தை மற்றவர் மீது வைக்க, நான் விசுவாச ஜெபத்தை உங்கள் ஒவ்வொருவருக்காகப் பெற்றுக் கொள்ள நான் நிச்சயமுடையவனாய் இருக்க விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் கரங்களை மற்றவர் மீது அமர்த்துங்கள். இதைத்தான் இன்னும் சில நிமிஷங்களில் கண்டுகொள்ளப் போகிறோம். இந்த என்னுடைய சிறு சபை நாங்கள் நம்புகிற காரியத்தில் எவ்வளவு முன்னேறிச் சென்றிருக்கிறது என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். மக்கள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்று பார்க்கிறேன். அவர்கள் பட்டயத்தைக் கையிலெடுத்து, முன்னணிக்குச் சென்று சாத்தானைச் சவால் விடுவதைப் பார்க்கிறேன். அவர்கள் சாத்தானிடம், “சாத்தானே உனக்கு சவால் விடுகிறேன். நான் உனக்குச் சவால் விடுகிறேன்! இனிமேல் என்னை அவிசுவாசிக்கச் செய்ய உன்னால் முடியாது'' என்று கூறுகின்றனர். இந்தக் காரியங்களெல்லாம் எதற்காகச் செய்யப்படுகிறது? அதை மக்கள் விசுவாசிக்கச் செய்யவே. அது வார்த்தையாக இருக்கிறது. அதுவே நான் வார்த்தையாகி சத்தியத்தை உங்களுக்குப் பிரசங்கிக்கிறேனென்று காட்டுகிறது. வார்த்தை மாம்சமாகி, உன்னிலே ஜீவனானது, என்னிலே ஜீவனானது. பார்? அந்த மாபெரும் வைத்தியர்! அது சரியே! நமது தலைகளை நாம் இப்போது வணங்குவோமாக! 73கர்த்தராகிய இயேசுவே, மாபெரும் வைத்தியர் எங்கள் அருகில் இருக்கிறார். நீரே அந்த வைத்தியன். உமது வார்த்தையை நான் பிரசங்கித்திருக்கிறேன். உமது வார்த்தை நீர் இங்கே இருக்கிறீர் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது; நீர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர் என்று கூறியிருக்கிறது. நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை. எங்களை ஒரு போதும் நீர் கைவிட்டதில்லை, ஆண்டவரே, இப்போது, ஒருவர் மீது ஒருவர் தங்கள் கரங்களை வைத்திருக்கிற ஒவ்வொருவர் மீதும் தேவனுடைய ஆசீர்வாதங்கள் அமருவதாக. மேலும் நாங்கள் ஜெபத்துடன் வரும்போது, நானும் போதகரும் அவர்களை எண்ணெயால் அபிஷேகித்து இந்த ஜெப வரிசையின் ஊடாய் கடந்து செல்லும் போது, ஒவ்வொருவரும் பரலோகத்தின் தேவன் நின்று கொண்டிருக்கும் பிரசன்னத்தை உணரச் செய்து, அதை விசுவாசிக்கும்படி செய்யும். ஒவ்வொருவரும் தங்களை உலுக்கிப் பார்க்க உதவும். இந்த ஒருவிசை மாத்திரம் ஆண்டவரே! ஆண்டவரே, இந்த ஒருமுறை அவர்கள் இருதயத்தின் ஆழத்தில் ஊறிச் செல்லட்டும். கர்த்தாவே, அவர்கள் கண்களை திறந்தருளும். அவர்கள் குருடராக இடறி விழுந்து கொண்டிராதபடி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று காணச் செய்யும். உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தின் உண்மைத் தன்மையை அவர்கள் காணும்படி செய்யும். தேவனே, இயேசுவின் நாமத்தில் இதைக் கட்டளையிடும். ஆமென். 74நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை எச்சரிக்கிறேன். அந்தப் பரிபூரண விசுவாசத்தைப் பெற்ற உணர்வு இல்லாவிட்டால் இந்த ஜெப வரிசைக்கு வரவேண்டாம். ஏனென்றால் அவர்களுடைய நேரத்தை, மற்றொருவருடைய நேரத்தை வீணாக்க வேண்டாம். அதைச் செய்யவே வேண்டாம்! நான் உங்களுக்குப் பிரசங்கித்த வரையிலும் நடைபெறாத ஒன்றை நான் எப்போதாகிலும் சொன்னதுண்டோ? அப்படியே நடந்தது! கர்த்தர் அதைச் செய்தார். அதை அவர் எனக்காகச் செய்யவில்லை என்று விசுவாசிக்கிறேன். நான் உங்களுக்குக் கூறுவது சத்தியமென்று நீங்கள் விசுவாசிக்கும்படியாக உங்களுக்காக அதைச் செய்தார். நீங்கள் அதை விசுவாசித்த பின் எல்லாம் சரியாகும். நீங்களும் குணமடைவீர்கள். இங்கே நீங்கள் வரும்போது, உங்கள் அவிசுவாசத்தை இங்கே உள்ள ஒரு ஆவிக்குரிய சபையில் போட்டுவிட்டு வாருங்கள். நீங்கள் அதைக் காண முடியாது. ஆனால் அது அங்கே இருக்கிறது. அந்த எண்ணெய் உங்களைத் தொடுகையில் அங்கேயே உங்கள் அவிசுவாசத்தைப் போட்டுவிடுங்கள். அதை அங்கே போட்டுவிட்டு நீங்கள் சுகமாயிருக்கிறீர்கள் என்று பரிபூரண விசுவாசத்துடன் நடந்து வெளியே செல்லுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 75அது சரி, பாட்டுகளில் நம்மை நடத்தக் கூடிய ஒருவரை நான் கேட்கப் போகிறேன். அந்த பெரிய பிரசங்கி சகோதரன் எங்கே?... அந்த... அவர் பெயர் என்ன? கேப்ஸ். சகோதரன் கேப்ஸ். அவர் இந்த வரிசையில் இருக்கிறாரா? அது என்ன? இங்கே வாருங்கள், சகோதரன் கேப்ஸ், அங்கே நின்று நாங்கள் ஜெபிக்கும் போது நீங்கள் பாடுங்கள் (சபையோர்), ஒவ்வொருவரும் “மாபெரும் வைத்தியர் இப்போது அருகில் இருக்கிறார்” என்ற இந்தப் பாட்டை உங்கள் முழு இருதயத்துடன் பாடும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். விருதாவாகப் பாடாதீர்கள். நான் பாடப் போகிறேன்; அந்த மாபெரும் வைத்தியன் அருகில் இருக்கிறார். “இரக்கமுள்ள இயேசு”, (நீ உன் இருதயத்திலிருந்து பாடவில்லை) ''சந்தோஷப்படுத்த இரக்கமுள்ள இயேசு“ ஓ! ஓ! என்னே இது! நீங்கள் இதை உன்னிப்பாகக் கேட்கும்படி நான் விரும்பு கிறேன். கவனமாக இருங்கள். ''ஆம்! மாபெரும் வைத்தியர் இங்கே இப்பொழுது இருக்கிறார், இரக்கம் காட்டும் இயேசு'' அவர் இங்கே இருக்கிறாரென்று ஜெபித்தோம். நான் அதை விசுவாசிக்கிறேன். ஆமென். 76சரி... விசுவாசத்தோடு இருக்கிறவர்கள் முன்புக்காக வாருங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகத்திற்காக், அவள் மேல் என் கைகளை வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் வியாதியை கடிந்து கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சுகத்திற்காக என் சகோதரரின் மேல் என் கைகளை வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரியின் மேல் அவளுடைய சுகத்திற்காக கைகளை வைக்கிறேன்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சகோதரரின் மேல் அவருடைய சுகத்திற்காக என் கைகளை வைக்கிறேன். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியின் மேல் அவளுடைய சுகத்திற்காக, என் கைகளை வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சகோதரரின் மேல் என் கைகளை வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரியின் மேல் என் கைகளை வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரரின் மேல் என் கைகளை வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரியின் மேல் என் கைகளை வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரரின் மேல் என் கைகளை வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரியின் மேல் என் கைகளை வைக்கிறேன். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில்! இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். அவர் சுகத்தை பெற்றுக் கொள்வாராக. இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், இக் குழந்தையை சுகமாக்கும். அதை அளியும் தேவனே. இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் இந்த சிறு பையனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் இந்த சிறு பையனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரரையை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். ஆண்டவரே கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் என் சகோதரரை சுகப்படுத்தும் இயேசுவின் நாமத்தில் என் சகோதரரை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரரை சுகப்டுத்தும். இயேசுவின் நாமத்தில் கர்த்தாவே...?... ஆண்டவரின் மகிமைக்காக. இயேசுவின் நாமத்தில் என் சகோதரரை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும் இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும் இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் இந்த குழந்தையை சுகமாக்கும் இயேசுவின் நாமத்தில் இந்த சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் இந்த சகோதரியை சுகப்படுத்தும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் சகோதரி...?... சுகப்படுத்தும் இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கர்த்தாவே எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகமாக்கும். அவரை சரிப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். ஆண்டவரே, கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், இந்த சிறு பெண்னை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் இந்த குழந்தையை சுகமாக்கும். குழந்தையை சுகமாக்கும் கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில். இச்சிறு பையனை சுகமாக்கும், இயேசுவின் நாமத்தில். என் சகோதரியை சுகப்படுத்தும். கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில். என் சகோதரி காலின்ஸை, ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில் சுகமாக்கும். என் சகோதரியை, இயேசுவின் நாமத்தில் சுகமாக்கும். என் சகோதரனை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாக்கும் என் சகோதரியை, இயேசுவின் நாமத்தில் சுகமாக்கும். இப்பொழுது உங்கள் அவிசுவாசத்தை விட்டுவிடுங்கள். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். உங்கள் அவிசுவாசத்தை இப்பொழுது இந்த பெட்டியில் போட்டுவிட்டு, பரிபூர்ணமான விசுவாசத்தோடு கடந்து செல்லுங்கள். இயேசுவின் நாமத்தில் அதை எடுத்துக் கொள்ளுங்கள், அப்படியே ஆகக்கடவது. இயேசுவின் நாமத்தில், அதை அளியும் கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில், அதை அளியும் கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும் கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும் கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் இந்த... இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. இயேசுவின் நாமத்தில், சகோ. 'காக்ஸ்'யை சுகப்படுத்தும், கர்த்தாவே தேவனுக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். இப்போது நினைவு கூறுங்கள், ஒரு நோக்கத்திற்காக, இதை எவ்விதமாய் செய்ய வேண்டும் என்பதை நான் அறிந்தவனாய் ஒவ்வொரு துளி விசுவாசத்தையும் இந்த காரியத்தில் நான் வைக்கிறேன். இயேசுவின் நாமத்தில், இந்த சிறு பெண்னை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில் என் சகோதரியை சுகமாக்கும். தேவனே, இக்குழந்தையின் மேலாக என் கைகளை வைக்கிறேன். எனவே, இயேசுவின் நாம்தில் இக்குழந்தை சுகமாவதாக ஆமென். இயேசுவின் நாமத்தில், இச்சிறு பெண்னை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். சிறு பெண்? உம்மண்டையில் அனைத்துக் கொள்ளும். உம்முடைய மகிமைக்காக, இயேசு கிறிஸ்துவின் நமத்தில், அவர்களை சுகமாக்கும் ஆண்டவரே. இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகத்தை நான் கேட்கிறேன். ஆண்டவரே, என் சகோதரியை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சிறு சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகுமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரனையும், அவருடைய குழந்தையையும் சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், கர்த்தாவே அவர்களை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். என் சகோதரியை சுகப்படுத்தும். என் சகோதரியை சுகப்படுத்தும், இயேசுவின் நாமத்தில் அவர்களுடைய...? அவர்களை ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இயேசுவின் நாமத்தில், அவருடைய வேண்டுதலை அருள்வீராக. இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். உங்கள் அவிசுவாசத்தை விட்டுவிட்டு, இப்பொழுது விசுவாசத்தோடு வாருங்கள். தேவன் அதை அருள்வார். அதை விசுவாசித்துக் கொண்டு வாருங்கள். தேவன் அதை அருள்வார். நான் அதை விசுவாசிக்கிறேன். எனக்கு தெரிந்த எல்லா முழு விசுவாசத்தையும், நான் பயன்படுத்துகிறேன். “வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்போது அவர்கள் சொஸ்தமாவார்கள்”. இயேசுவின் நாமத்தில், என் சகோதரனை சுகமாக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் சகோதரியை சுகமாக்கும். இந்த காட்சி எப்படி இருக்கிறது, சகோதரன் நெவில்? சகோதரன். டாக், தேவனுடைய கிருபையின் ஓர் வெற்றி பரிசாக இருக்கிறார்! இந்த மனிதர், ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு முன் மரித்திருக்க வேண்டும். தேவனாகிய, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் அவரை நேசிக்க வேண்டும். ஏனெனில் நீர் அவருக்கு பெரிய காரியங்களை செய்திருக்கிறீர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர் மேல் என் கரங்களை வைக்கிறேன். தேவனாகிய கர்த்தாவே, அவருடைய விலையேறப்பெற்ற மனைவியின் மேல், என் கரங்களை அவளுடைய சுகத்திற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வைக்கிறேன். ஆமென். ஜெபிக்கப்பட வேண்டியவர்கள் அவ்வளவுதானா? இப்பொழுது, நாம் தலை வணங்குவோம், மாபெரும் வைத்தியன் அருகில் இருக்கிறார் இரக்கமுள்ள இயேசு; நம்பிக்கையில்லா இருதயத்தைப் பேசி உற்சாகப்படுத்துகிறார் ஓ! இயேசுவின் சத்தத்தைக் கேள். சேராபீன்களின் பாட்டின் இனிய நாதம் அழிந்து போகும் நாவில் இனிய நாமம் பாடிய பாட்டுகளில் இனிய கீதம் இயேசு, ஸ்தோத்தரிக்கப்பட்ட இயேசு 77இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு நான் என்ன செய்தேனென்று தெரியுமா? நீங்கள் என்னை “உங்கள் போதகர்'' என்று அழைத்தீர்கள், நீங்கள் சொன்னது சரியே. நான் அவ்வாறே இருக்கிறேன். உங்கள் போதகராகிய நான் இயேசு கிறிஸ்துவினாலே அடையாளங் கண்டு கொள்ளப்பட்டு அவருடைய வேலையை செய்கையில், என் வார்த்தையை நம்புங்கள். இந்த விசுவாசத்தின் கிரியை நடப்பிக்கையில், உங்கள் மீது கைகளை வைக்கையில், உங்களைத் துன்பப்படுத்துகிற, கஷ்டப்படுத்துகிற இன்னல்களையும் வியாதியையும் நான் கடிந்து கொண்டிருக்கிறேன், உங்கள் விண்ணப்பம் எதுவாக இருந்தாலும், அது நிறைவேறும் என்று விசுவாசியுங்கள். ஏனென்றால் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். நீ ஜெபிக்கும் போது நீ கேட்டதை பெற்றுக் கொண்டேன் என்று விசுவாசி. நான் அதைப் பெற்றுக் கொண்டேன் என்று உண்மையாய் விசுவாசிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய சுகத்தையும். அது கிடைத்தது என்று விசுவாசித்து, அதை உங்களுக்காக ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். என்னிலுள்ள எல்லாவற்றையும் கொண்டு அதை விசுவாசிக்கிறேன். மேலும் இங்கே இருக்கிற கைக்குட்டைகளின் மேல் என் கைகளை வைக்கையில், நான் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். ஜனங்கள் கேட்டுக் கொண்டதின்படியே அவைகள் (சுகத்தைத் தரும்) கிரியை செய்யும் என்று நான் நம்புகிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன். 78இப்பொழுது மூன்றாம் இழுப்புக்கு நாம் வருகிறோம். அதை நான் விசுவாசிக்கிறேன். இந்த ஜெப வரிசையைக் கடந்து சென்றவர்களை ஒரு உண்மையான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். உங்கள் மீது கைகள் வைக்கப்பட்டதிலிருந்து உங்களுக்குள் ஏதோ நடந்தது என்று இப்பொழுது உணர்ந்து அதை உண்மையாகவே விசுவாசிக்க முடிகிறதா? சரி. உங்கள் கைகளை உயர்த்துங்கள். அங்கேயே இருங்கள். இப்பொழுது இதற்காகத் தான் நாம் காத்திருந்தோம், இப்பொழுது இது பூக்க ஆரம்பித்திருக்கிறது. பார்? நான் இதை ஒரு நோக்கத்துக்காக செய்தேன். அது ஆரம்பித்து... நான் ஒரு நோக்கத்துக்காக இப்படிச் செய்தேன். நான் ஒன்றைச் செய்கிறேன், அது விசுவாசத்தை எடுத்த வண்ணமாக, அது ஆரம்பித்த நிலையில் பின் நோக்கிச் சென்று, பின்பு உள்ளே வந்து, உன்னுடைய அறைகுறையான விசுவாசத்தை உயர்த்தி, நீ ஒருக்காலும் காணாதவாறு இருந்த உன் விசுவாசத்தைப் இப்போது உயர்த்துகிறது. அது விசுவாசமல்ல, ஆனால் ஓர் பரிபூரண விசுவாசம்; இங்கே கட்டப்பட்ட வளர்க்கப்பட்ட ஓர் சரீரம். ஒரு பரிபூரண தெய்வத்தை ஒரு பரிபூரண இருதயத்துடன், பரிபூரண வார்த்தையால் நிறைவேறி வருகிற இருபுறமும் கருக்குள்ள பட்டயமாக, இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாகவும் இருக்கிறது. அது என்ன? நாம் பரிபூரணத்திற்குள் இப்போது வருகிறோம். ஏனென்றால் எடுத்துக் கொள்ளப்படுவதின் நிமித்தமாக, ஜனங்கள் இந்த ஒழுங்குக்கு வர வேண்டியிருக்கிறது. இதுதான் இப்பொழுது இதை நிறுத்தி வைத்திருக்கிறது. சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலின் பரிபூரண விசுவாசத்திற்காக அது காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக அதை நோக்கிப் பார்த்தவனாக இருக்கிறேன். அதை எதிர்நோக்கினவனாக இருக்கிறேன். அதினாலே எனக்கு அதிகமாக உதரித் தள்ளக் கூடியது இருக்கிறது, உங்களுக்கு அது ஏராளமான அர்த்தமுள்ளது. ஆனால் நாம் ஒன்று சேர்ந்தவர்களாய் தேவ கிருபையால் அதற்குள் சென்றுவிடுவோம். ஆமென். அந்த மாபெரும் வைத்தியன் அருகில் இருக்கிறார். இரக்கமுள்ள இயேசு. இயேசு ஆண்டவரே! இப்பொழுது நீர் இங்கு பிரசன்னமாயிருக்கிறீர், எங்களுக்கு தேவனுடைய பிரசன்னமாகிய பரிசுத்தாவி இருக்கிறது. உமது பரிசுத்த ஆவியானவர் இந்தப் போதகரை எப்போதும் சுகத்துடனும் பெலத்துடனும் தன்னுடைய பிரயாணத்தில் நீர் அழைக்கும் வரைக் காத்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில். தேவனே, அதை உரிமை பாராட்டுகிறேன். நான் அவரை நேசிக்கிறேன். நாம் இருவரும் அதை உரிமை பாராட்டி பெற்றுக் கொள்ள எங்கள் இருவருக்கும் விசுவாசம் உண்டு. எப்பொழுதும் பாடப்படாத இனிய கீதம் ஓ இயேசுவே, ஸ்தோத்தரிக்கப்பட்ட இயேசுவே. 79அவரை நீங்கள் நேசிக்கிறீர்கள் அல்லவா? யோசித்துப் பார். அவர் தாம் உன்னுடைய சரீரத்தில் ஏற்கனவே ஒரு வேலையை ஆரம்பித்திருக்கிறார், உன்னுடைய சுகம், ஏனென்றால் அது நடக்கும் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். இப்போது (பார்?) நான் இன்றிரவு கூறினதைப் புரிந்து கொண்டீர்களா? அதனுடைய விடுகதையை பெற்றுக் கொண்டீர்களா? பார், ''இந்த மலையை நோக்கி நீ சொல்லும் போது சந்தேகப்படாமல், சந்தேகப்படாமல், நீ சொன்னதை விசுவாசிக்க வேண்டும். இப்பொழுது அதை கவனி! ஐந்து நிமிஷங்களுக்கும் குறைவான நேரத்தில் இங்கே ஒவ்வொருவரிடத்திலும் ஒரு வேலை ஆரம்பமானதற்கு அறிகுறியாக ஒவ்வொரு கையும் உயரச் சென்றது. ஓ! என்னே! அங்கே அவர் இருக்கிறார், அது அதைச் செய்தது. அது என்ன? மாபெரும் வைத்தியனின் பிரசன்னம். ஓ, நமது கரங்களை தேவனிடத்தில் உயர்த்தி, மறுபடியும் அதைப் பாடுவோம். மாபெரும் வைத்தியன் அருகில் இருக்கிறார் இரக்கமுள்ள இயேசு நம்பிக்கையில்லா இருதயத்தைப் பேசி உற்சாகப்படுத்துகிறார். ஓ, இயேசுவின் சத்தத்தைக் கேள். சேராபீன்களின் பாட்டின் இனிய நாதம். அழிந்து போகும் நாவில் இனிய நாமம். பாடிய பாட்டுகளில் இனிய கீதம் இயேசு, ஸ்தோத்தரிக்கப்பட்ட இயேசு. 80ஒரு நிமிஷம் எழுந்து அமைதியாக நிற்போம். நமது இருதயத்தில் நாம் அவரைத் தொழுது கொள்வோம். அதை யோசித்துப் பார். தேவன், அவர் இங்கே இருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார். யார்? தம்மை வார்த்தையாக, வெளிப்படுத்தின அவர் ''ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாய் இருந்தது, வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வாசம் செய்தார்“, நேற்றும், இன்றும், என்றும், மாறாத அவர் இருபுறமும் கருக்கான எந்த ஒரு பட்டயத்தைக் காட்டிலும் கருக்குள்ள அந்த வார்த்தை, எண்ணங்களையும் சிந்தனைகளையும் வரையறுக்கிற ஒன்று, (நீ இங்கு எதற்காக வந்தாய். வந்ததின் நோக்கம் என்ன?) இயேசுவை மேசியாவாக அடையாளம் கண்டு கொண்டு, நேற்றும்,இன்றும், என்றும் அதே மேசியாவாக இருக்கிற அவரை இன்று அடையாளம் கண்டு கொண்டது. 81மாபெரும் வைத்தியர் இங்கே இருக்கிறார். அவர் சொன்னார், “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அவர்கள் சொஸ்தமாவார்கள். இந்த மலையைப் பார்த்து, 'அசைந்து போ' உன்னுடைய இருதயத்தில் சந்தேகிக்காதே என்றும் அவர் அணில்களை சிருஷ்டிக்க முடியும் என்றும் விசுவாசி” ...அங்கே அணில்கள் உண்டாகக் கூடிய வழியே இல்லை. அதை விசுவாசிக்க ஒன்றுமே அங்கில்லை; என்னுடைய விசுவாசமே அங்கு சென்று அதைச் செய்தது. அவர் என்னைச் சவால் விட்டுக் கேள் என்று சொன்னதில் என் விசுவாசம் இருக்கிறது. அவர் கேட்கும்படி சவால்விட்டார், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய அவருடைய சவாலை நான் ஏற்றுக் கொண்டேன். ஆகவே அது தோன்றினது அது உண்மை என்று பரலோகத்தின் தேவன் அறிவார். வியாதியஸ்தரையும் அவர் சொஸ்தமாக்கக் கூடுமா? ஜனங்களுக்காக, அவர்கள் அந்த விசுவாச வளைவுக்குள் ஏற முடியாவிட்டாலும், அவர் என்னை ஒரு விசுவாச அளவோடு உயர்த்த முடியும். பார். அவர்கள் அதைச் செய்ய முடியாவிட்டால் என்னுடைய விசுவாசத்தை அவர் தூக்கி விட முடியும். நான் உங்களுக்காக அந்த இடத்தில் ஏறுகிறேன். உங்களுக்காக விசுவாசிக்கிறேன். உங்களுக்காகப் பேசுகிறேன். 82நான் உங்கள் சகோதரன். ஒரு மத்தியஸ்தனாக, ஒரு சகோதரனாக நிற்கிறேன். என்னால் முடிந்த அளவு உங்களைத் தேவனுக்கு முன்னால் நிறுத்த முயற்சிக்கிறேன். இப்போது இங்கே வெள்ளை சிங்காசனத்துக்கு முன் நின்று என் விரலை அந்த இரத்த பலிக்கு நேராகக் காட்டி, அது நடந்து முடிந்தது என்று அவருடைய நாமத்தில் பேசுகிறேன், அது நடந்தாக வேண்டும். அது நடந்தாக வேண்டும். அது நடந்தது என்று உனக்குத் தெரியும். அது நடந்தது என்று எனக்குத் தெரியும். அது நடந்தது என்று உனக்குத் தெரியுமா? அது அப்படியே இருக்கிறது. அது சரியே. ஆமென். ...எப்போதும் பாடப்பட்ட கீதம் ஓ இயேசு, ஸ்தோத்தரிக்கப்பட்ட இயேசு சேராபீன்களின் பாட்டின் இனிய நாதம் அழிந்து போகும் நாவில் இனிய நாமம் பாடிய பாட்டின் இனிய கீதம் இயேசு, ஸ்தோத்தரிக்கப்பட்ட இயேசு 83பிசாசுகள் உமது நாமத்துக்கு அடங்கின. அழிந்து போகக் கூடிய நாவில் இனிய நாமம். பிசாசுகள்... மரித்தோரை எழுப்பி, வியாதியஸ்தரைச் சுகப்படுத்தி, குஷ்டரோகியை சுத்தப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தி, இதுவே நம்மைக் கிறிஸ்தவர்களாக்குகிறது. வானத்தின் கீழே வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை. அதிலே ஜீவிக்கிறேன், அதிலே ஞானஸ்நானம் பெற்று, அதை விசுவாசித்து, அதை ஆராதிக்கிறேன். ஓ! அதனுடைய பாகமாக நான் மாறுகிறேன். என்னையே நான் அவிழ்த்து, உம்மிலே அதைக் கண்டு, அந்த நாமம் இயேசு கிறிஸ்து, அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா; நான் அவிசுவாசமாகிய உழையினூடே கடந்து சென்று இயேசு கிறிஸ்துவின் அழகை பிரதிபலிக்க, நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர். 84தேவன் இப்போது உங்களை ஆசீர்வதிப்பாராக. அடுத்த ஞாயிறு இங்கே திரும்ப வருகையில், எப்படி சொஸ்தமானீர்கள் என்ற ஒரு சாட்சி கொடுக்க வேண்டும்; இந்த வாரம் என்ன நடந்தது என்று கவனி! என்ன நடக்கிறது என்று பார். அது முடிந்துவிட்டது. “எப்படி உனக்குத் தெரியும்?'' அவர் அதைக் கூறும்படி சொன்னார், நான் கூறினேன். அது இப்பொழுது முடிந்துவிட்டது. அது முடிந்துவிட்டது. அதை விசுவாசிக்கிறேன். இப்பொழுது, போதகர் நெவில். ஒரு நிமிடம், (சபையோரின், அந்நிய பாஷையும் அதற்கு வியாக்கியானமும் மொழி பெயர்ப்பு - ஆசிரியர்) “என்னுடைய வார்த்தை, நான் யாருக்கு வெளிப்படுத்துகிறேனோ, அவர்களுடைய இருதயத்தில் அது உண்மையாயிருக்கவில்லையா? என்று உன் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ஆம், என்னுடைய ஆவியாகிய ஈட்டி இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது என்று இன்று இரவு நான் பேசினது போல என்னுடைய வார்த்தை கருக்கானதாய் இருக்கிறதல்லவோ! ஆம் நான் உங்களுக்கு சொல்லுகிறேன், ”நான் சுகப்படுத்த முடியாத அளவிற்கு, என் கரம் குறுகிப் போகவில்லை. உங்கள் ஜெபங்களை கேட்காத அளவிற்கு, என் காதுகள் மங்கிப் போகவில்லை, என்று உன் ஆண்டவராகிய கர்த்தர் கூறுகிறார். ஆம், நீ என்னை நோக்கிப் பார்த்து, அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், உன்னை (ஒலி நாடாவில் தெளிவாக கேட்க முடியவில்லை) எதற்காக அழைத்தேனோ, அதுதாமே நிறைவேறும் என்று உன் ஆண்டவராகிய கர்த்தர் கூறுகிறார். ஆம், இந்த இரவில் உங்களிடம் உரைக்கப்பட்ட வார்த்தை, சத்தியம் தான் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். மேலும், நான் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின அடையாளங்கள் ஏற்கனவே நிறைவேறியும், இன்னும் அவை எல்லாம் நிறைவேறிக் கொண்டுதான் இருக்கிறது“, என்று உன் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். மேலும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது, என்னவெனில் நான் உங்களோடு இடைப்பட்டிருக்கிறேன் என்றும், உங்களோடு கூட இருப்பேன் என்பதற்காக இந்த ஜெபமானது உங்களை இருதயத்தில் உறுதிப்படுத்தப்படிருப்பதாக என்று கர்த்தர் கூறுகிறார்”) கர்த்தரின் நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக, நமது கைகளை உயர்த்தி ஒரு நிமிஷம் அவரை ஆராதிப்போம், (சபையோர் ஆராதிக்கிறார்கள் - ஆசிரியர்). இப்போது நீ ஒரு விசுவாசியாக செய்தி பேசப்பட்டதின் ஆழத்தை கவனித்தாயா, அது பேசப்பட்டதொன்றை கவனித்தாயா, அது திரும்பவுமாக மொழி பெயர்த்ததைக் கவனித்தாயா...? அதுவே. செய்தியுடனே எவ்வளவாகப் பொருந்தியிருந்தது; அந்தக் காரியம் சத்தியம் என்று நிரூபித்து, அவர் உனக்கு என்ன செய்வேன் என்று வாக்குத்தத்தம் செய்தது. ஏற்கனவே நடந்துவிட்டது என்பதையும் கவனி. அது வந்த விதத்தையும், அது மொழி பெயர்த்த விதத்தையும் கவனி. அது வந்த விதத்தையும், அது மொழி பெயர்த்த விதத்தையும் கவனி. அவர் எவ்வளவு நேரம் பேசினார், எத்தனை வார்த்தைகளை அவர் சொன்னார், மிகவும் சரியாக என்பதை கவனி. மறுபடியும் நான் உங்களைக் காணும்வரை, தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை இயேசுவின் பாதங்களில், நாம் சந்திக்கும் வரை நாம சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை நாம் மீண்டும் சந்திக்கும் வரை, கர்த்தர் உங்களோடு இருப்பாராக.